சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Share

சாலையோரத்தில் விற்கப்படும் சலுகை விலையிலான சிம் கார்டுகள் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நம்முடைய அடையாள அட்டையை பயன்படுத்தி சிம் கார்டுகள் சமூக விரோதிகளுக்கு விற்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

சென்ற ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளரை சுட்டுக் கொன்ற தீவிரவாத கும்பல்கள் பயன்படுத்திய சிம் கார்டுகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வசிப்பவர்களின் பெயர்களில் வாங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதாவது போலி முகவரியில் இந்த சிம் கார்டுகளை வாங்கி தேசவிரோத கும்பல் பயன்படுத்தி உள்ளது.

இது தற்போது தமிழக க்யூ பிரிவு காவல்துறை கண்டுபிடித்துள்ளது. பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. சாலையோரத்தில் சிம் கார்டுகள் வாங்குபவர்களின் அடையாளங்களை பயன்படுத்தி தீவிரவாத கும்பல்களும், ஆன்லைன் வங்கி மோசடி செய்பவர்களும் இந்த சிம் கார்டு வாங்கி பயன்படுத்து வந்துள்ளது.

செல்போன் கம்பெனிகளின் அங்கீகாரம் பெற்ற கடைகளில் சிம் கார்டு வாங்காமல் சலுகைகளுக்கு ஆசைப்பட்டு சாலையோர கடைகளில் வாங்கும் வாடிக்கையாளர்களின் ஆவணங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என காவல்துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக சிம் கார்டுகள் விற்கவேண்டும் என செல்போன் கம்பெனிகள் தங்கள் ஊழியர்களை நிர்பந்தப்படுத்துவதால் இதுபோன்ற தவறுகள் நிகழ்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் சலுகைகளுக்கு ஆசைப்படாமல் சம்பந்தப்பட்ட தொலைதொடர்பு நிறுவனங்களின் அங்கீகாரம் பெற்ற கடைகளுக்கு சென்று புதிய சிம்கார்டு வாங்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Share

Related posts

எந்த நேரத்திலும் சுதாகரன் விடுதலை – சிறைத்துறை

Admin

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

பப்ஜி மதன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Udhaya Baskar

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

கால்நடை மருத்துவ படிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 28

Udhaya Baskar

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

தங்கம் விலை ரூ.200 உயர்வு

Udhaya Baskar

மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்ற கபடி வீரர்கள்

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Admin

Leave a Comment