முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Share

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பூட்டாசிங் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்த பூட்டாசிங், கடுமையான உழைப்பால் காங்கிரஸ் கட்சியின் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவராக உருவெடுத்தார். மத்திய அரசில் விவசாயம், வர்த்தகம், தொலைத் தொடர்பு, நாடாளுமன்ற விவகாரம், வீட்டு வசதி, கப்பல் போக்குவரத்து ஆகிய துறைகளின் அமைச்சராக பணியாற்றிய அவர், உள்துறை அமைச்சர் பதவியிலும் சிறப்பாக செயல்பட்டார். காங்கிரஸ் கட்சியிலும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார். அகில இந்திய எஸ்.சி/எஸ்.டி ஆணையத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

பூட்டாசிங் அவர்களுக்கும், எனக்கும் 32 ஆண்டுகளாக நெருங்கிய நட்பு உண்டு. தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி 1980-ஆம் ஆண்டு முதல் எனது தலைமையில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த போது, 1988-ஆம் ஆண்டு ஆளுனர் ஆட்சிக்காலத்தில் மத்திய அரசின் பிரதிநிதியாக அப்போதைய உள்துறை அமைச்சர் பூட்டாசிங் எங்களை சந்தித்து பேசினார். வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுக் கொடுத்து விட வேண்டும் என விரும்பினார்.

மருத்துவப் படிப்புக்கான அகில தொகுப்பில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படாமல் இருந்த நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் பொறுப்பேற்ற பிறகு தான், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதற்காக மருத்துவர் அன்புமணி இராமதாசுக்கு சென்னையில் தலித் அமைப்புகள் நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய பூட்டாசிங், ‘‘அம்பேத்கருக்கு பிறகு தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர் அன்புமணி இராமதாஸ் தான்’’ என்று புகழாரம் சூட்டினார். பழகுவதற்கு நல்ல மனிதர்.

பூட்டாசிங் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


Share

Related posts

என்ஆர் காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த ரங்கசாமி

Admin

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் – அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

விழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் பற்றி எரிந்தன

Admin

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் விளக்கம்

Admin

சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளது

Admin

பெண்கள் பாதுகாப்பிற்கு தனி நீதிமன்றம்-முக ஸ்டாலின்

Admin

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தீ விபத்து

Admin

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Admin

ஆன்லைன் மூலம் ரூ.2.60 கோடி மோசடி

Admin

Leave a Comment