தனக்கு பதாகைகள் ஏதும் வைக்கவேண்டாம் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

Share

“கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் ஆய்வுக்காக வரும் தனக்கு, பதாகைகள் ஏதும் வைக்கவேண்டாம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கொரோனா பெருந்தொற்று தடுப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக ஆய்வு நடத்துவதற்கான பயணத்தை நாளை (20.5.2021) மற்றும் நாளை மறுநாள் (21.5.2021) சேலம், திருப்பூர். கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்கிறேன்.

இந்தப் பயணம் முழுக்க முழுக்க அரசு அலுவல் சம்பந்தப்பட்டது. குறிப்பாக, பொதுமக்களைப் பாதுகாக்கும் பணிகள் தொடர்பான ஆய்வு என்பதால் கழக நிர்வாகிகள் எவரையும் சந்திக்க இயலாத சூழலில் இருக்கிறேன்.

எனவே, கழக உடன்பிறப்புகள் நான் ஏற்கனவே அறிவித்திருந்தபடி பாதுகாப்பு விதிகளைப் பின்பற்றி, ‘ஒன்றிணைவோம் வா’ பணிகளில் ஈடுபட்டு மக்களுக்குத் தேவையானவற்றை நிறைவேற்றித் தர வேண்டும் என்றும் – இந்தப் பயணத்தின் போது அல்லது நான் தங்கும் இடங்களில் என்னைச் சந்திக்க எவ்வித முயற்சிகளிலும் ஈடுபட கூடாது என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். மேலும் எனக்கு வரவேற்புக் கொடுக்கும் எண்ணத்தில் பயணம் செய்யும் பகுதிகளில் கழக கொடிகளைக் கட்டுவதையும், பதாகைகள் வைப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

கழக உடன்பிறப்புகளான உங்களைச் சந்திப்பது எனக்கு எப்போதும் ஊக்கத்தைத் தரும் என்றாலும், இந்தத் தருணத்தில் உங்கள் நலனும் – பொதுமக்கள் அனைவரின் நலனும் எனக்கு மிகவும் முக்கியம் என்பதால் என்னுடைய இந்த அன்பு வேண்டுகோளை கழகத்தினர் தவறாது கடைபிடித்திட வேண்டுகிறேன்.


Share

Related posts

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

மக்களை காப்பாற்ற கவிஞனாக மாறிய காவல் கண்காணிப்பாளர் !

Udhaya Baskar

தமிழகத்தில் கொரோனா இல்லாத மாவட்டம்

Admin

லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல் ! சார்பதிவாளர் சஸ்பெண்ட் !

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

எஸ்ஐ தேர்வுக்கான உத்தேச பட்டியலுக்கு இடைக்கால தடை

Admin

இந்த படம் எல்லாம் நேரடியா OTT’ல வருதா!!!

Udhaya Baskar

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

2021-22 வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை – பாமக

Udhaya Baskar

Leave a Comment