தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் 1 – துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வாழ்த்து !

Share

தி.மு.க. பொதுக்குழு தீர்மானம் 1 – துரைமுருகன், டி.ஆர்.பாலுவுக்கு வரவேற்பு

சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கழகத்தின் புதிய பொதுச்செயலாளர் திரு.துரைமுருகன் – பொருளாளர் திரு.டி.ஆர்.பாலு ஆகியோர்க்கும்; துணைப் பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி – திரு. ஆ.இராசா ஆகியோர்க்கும் வரவேற்பும், வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் கொள்கைத் தடம் பற்றி வளர்ந்த, கழகத்தின் மூத்த முன்னோடி திரு. துரைமுருகன் அவர்கள் கழகப் பொதுச்செயலாளராக, ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கு இந்தப் பொதுக்குழு தனது வரவேற்பையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.

பள்ளிப் பருவத்தில் போர்க்குணம் கொண்டவர். சத்தியவாணிமுத்து அம்மையாரை அழைத்து கிளைக் கழகம் துவக்கி, அக்கிளைக் கழகச் செயலாளராகப் பொறுபேற்றவர். பச்சையப்பன் கல்லூரி தந்த திராவிட இயக்கப் பண்பாட்டுச் செயல்வீரர் – சென்னை அனைத்துக் கல்லூரிகள் தமிழ் மன்றத் தலைவர் – திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் போது 1963-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மூலம் முத்தமிழறிஞர் கலைஞருக்கு அறிமுகமாகி, 1965 இந்தி எதிர்ப்புப் போரில் முதலில் கைதான மாணவர் தலைவர் – பேரறிஞர் அண்ணாவுடன் சிறைவாசம் – மிசாவில் ஒரு வருடம் சிறை வாசம் – 9 முறை சட்டமன்ற உறுப்பினர் – கழகத்தில் தணிக்கைக்குழு உறுப்பினர் – மாணவர் அணிச் செயலாளர் – தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் – கழக துணைப் பொதுச்செயலாளர் – கழகப் பொருளாளர் என பல பெருமைகளை தன்னகத்தே கொண்ட கொள்கைக் கருவூலம் திரு. துரைமுருகன் அவர்கள், பொதுப் பணித்துறை அமைச்சராக, தமிழகத்திற்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிவித்து சிறப்புறச் செயலாற்றியவர்.

“முத்தமிழறிஞர் அவர்களிடமிருந்து அணுவளவும் விலகாமல் அருகிலேயே இருந்து சேவகம் செய்யும் ஒரு சீடனைப் போல் தொடர்ந்து இருந்து வருவதுதான் நான் பெற்ற பேறு” என்றும்; “அன்றும், இன்றும், என்றும் கலைஞரின் பாசறையில் வளர்ந்த கட்டுப்பாடான சுயமரியாதை வீரன்” என்றும்; தனது கோட்பாடாக – கொள்கை உறுதிப்பாடாக நிலைநிறுத்தி – மக்கள் பேரியக்கமான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அயராது பணியாற்றி வரும் அவர், இன்றைக்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக இருப்பவர். தமிழக சட்டமன்றத்தில், கழகத்தின் “இடி மின்னல் மழை”களில் ஒருவராக, இந்த இயக்கத்திற்கு அருந் தொண்டாற்றி வரும் அவர் – கழகத்தின் பொதுச்செயலாளராக, முன்னெப்போதும் போல், கழகத் தலைவருக்கு உற்ற துணையாகவும், உணர்வு மிக்க உடன் பிறப்பாகவும் இருந்து, எந்நாளும் கழகப் பணியாற்றிட இந்தப் பொதுக்குழு இதயபூர்வமாக வாழ்த்தி மகிழ்ச்சி கொள்கிறது.

கழகப் பொருளாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு.டி.ஆர்.பாலு அவர்கள் 1957ல் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினராகி, பகுதிப் பிரதிநிதி, மாவட்டப் பிரதிநிதி, பொதுக்குழு உறுப்பினர் என்று படிப்படியாய், பல்வேறு பொறுப்புகளை வகித்து, பம்பரம் போல் சுழன்று பணியாற்றி – 1974ல் கழகத்தின் சென்னை மாவட்ட துணைச் செயலாளரானவர். மிசா நெருக்கடி காலத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் ஒட்டுநராகவே பணியாற்றியவர். மிசாவில் கைதாகி சிறை சென்றவர். 1983 முதல் 1992 வரை சென்னை மாவட்ட தி.மு.க. செயலாளராக இருந்தவர்.

பாரம்பரியம் மிக்க கழகக் குடும்பத்தைச் சேர்ந்த அவர், தென்சென்னை மற்றும் திருப்பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆறு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1986 முதல் 1992 வரை கழக மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி, பாராளுமன்ற மற்றும் துறை சார்ந்த பல்வேறு குழுக்களில் கழகத்தின் கருத்துகளைத் திறம்பட எடுத்து வைத்தவர். சாலை மற்றும் தரை வழிப் போக்குவரத்து, வனம் மற்றும் சுற்றுச்சூழல், பெட்ரோலியம் உள்ளிட்ட துறைகளின் மத்திய அமைச்சராகப் பணியாற்றி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர். தமிழகத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் “பேரறிஞர் அண்ணாவின்” கனவுத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப் பாடுபட்டவர். அவரது பெயர் கூறும் பூகோள அடையாளங்கள் நிரம்ப உண்டு. அதிமுக ஆட்சியில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நள்ளிரவில் கைது செய்யப்பட்ட போது, காணப் பொறுக்காமல் கொதிப்படைந்து, மத்திய அமைச்சர் என்றும் கருதாமல், துணிச்சலுடன் நேரடியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு, மறைந்த முரசொலி மாறன் அவர்களுடன் கைதான அவர் ஆவேசம் நிறைந்த போராட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை மாவட்டத் தளபதியாக விளங்கியவர் – கழகத் தலைவர் அவர்களின் தளபதியாக, முதன்மைச் செயலாளராகப் பணியாற்றி – தற்போது பாராளுமன்ற தி.மு.க. குழுவின் தலைவராக இருக்கும் அவர்- கழகப் பொருளாளராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு கூறி, பாராட்டுதலைத் தெரிவித்து; அவரது அயராத கழகப் பணி இன்றுபோல் என்றென்றும் இனிதே தொடர்ந்திட இந்தப் பொதுக்குழு இதய பூர்வமாக வாழ்த்தி மகிழ்கிறது.

கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் க.பொன்முடி அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் – பேராசிரியர், நாவலர், மதியழகன் ஆகியோர் வரிசையில், திராவிட இயக்கத்திற்குத் தந்த கொடைகளில் ஒருவரான – களப் போராளிகளில் ஒருவரான – டாக்டர் திரு.க.பொன்முடி; தனது 17 ஆண்டு ஆசிரியர் பணியைத் துறந்து விட்டு, திராவிட இயக்கத்துடன் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டவர். அவர் நாடு போற்றும் நற்றமிழ்ப் பேச்சாளர்; ஆழ்ந்த சிந்தனைமிக்க அவர் எந்தக் கருத்தையும் எவரும் உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம், எளிமையாக எடுத்துவைக்கக் கூடியவர்.

1989-ல் விழுப்புரம் சட்டமன்றத் தொகுதியில் முதன்முதலில் வெற்றி பெற்று, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் அமைச்சரவையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகப் போற்றத்தக்க முறையிலே பணியாற்றியவர். பிறகு போக்குவரத்துத்துறை, உயர்கல்வித்துறை அமைச்சராக பணியாற்றிய அவர், 1997 முதல் இன்று வரை 23 வருடங்கள் விழுப்புரம் மாவட்ட கழகச் செயலாளராக இருந்து இயக்கத்தை மிகவும் சிறப்புற வளர்த்தவர். “தரம் குறைந்த அரிசி” என்பதை நிரூபிக்க அரசு அரிசி குடோனுக்குள், துணிச்சலாக எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போது, சென்று ஆய்வு நடத்தி – அதற்காகச் சிறை சென்றவர் மட்டுமின்றி – ராணிமேரி கல்லூரியை இடிக்கும் அதிமுக அரசின் திட்டத்தை எதிர்த்து, கல்லூரிக்குள் கழகத் தலைவருடன் சென்று மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்டவர். கழகத்தின் முதன்மை களவீரர்களில் ஒருவரும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும் வெற்றி பெற்ற க.பொன்முடி அவர்கள் கழக துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு இப்பொதுக்குழு இதயபூர்வமாக பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து – முக்கியமான இந்தப் பொறுப்பில் அவர் மேலும் சிறப்புடன் கழகப் பணியாற்றிட வாழ்த்துகிறது.

கழகப் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஆ.இராசா அவர்கள் இளமைப் பருவத்திலேயே திராவிட இயக்க சித்தாந்தங்களில், இயல்பாகவே தீவிர ஈடுபாடு கொண்டு – தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர்தம் எழுத்துகளையும், பொதுவுடைமைத் தத்துவங்களையும் கசடறக் கற்று – பெரம்பலூர் மாவட்டக் கழக இலக்கிய அணிச் செயலாளர், 1997ல் ஒன்றியச் செயலாளர், பிறகு மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்து – 2009 முதல், கொள்கை பரப்புச் செயலாளராகப் பணியாற்றி வரும் திரு.ஆ.இராசா, பெரம்பலூர், நீலகிரி தொகுதிகளில் ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மத்திய அமைச்சரவையில் ஊரகவளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் – சுற்றுச்சூழல் துறை மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை ‘கேபினெட்’ அமைச்சராகவும் பணியாற்றி – நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்ட அவர், சமூக சீர்திருத்த சிந்தனைகள் நிறைந்தவர். திரு.ஆ.இராசா அவர்கள், கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதற்கு, இந்தப் பொதுக்குழு இதயபூர்வமான பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து – கழகப் பணியில் அவர் மேலும் சீரும் சிறப்புமாகச் செயலாற்றிட வாழ்த்துகிறது.


Share

Related posts

வெள்ளை ஆடையில் பிரியங்கா ஹாட் செல்ஃபி ரசிகர்கள் கிளுகிளு

Udhaya Baskar

“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” – திமுக சபதம்

Udhaya Baskar

பள்ளி கல்வித்துறை பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட தேவை இல்லை – அமைச்சர்

Admin

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

அ.தி.மு.க. அரசின் ஊழலுக்கு உடந்தையா பா.ஜ.க.? – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தி.மு.க.வுக்கு தக்கபாடம் புகட்டவேண்டும் – முதல்வர்

Admin

முன்னாள் அமைச்சர் மீது பாலியல் புகார். ஆதாரங்களை வெளியிட்ட நடிகை!

Udhaya Baskar

வன்னியர் இட ஒதுக்கீடு: 9-ஆம் தேதி பா.ம.க. அவசர நிர்வாகக் குழு கூட்டம்

Admin

மக்களுக்காக ரஜினியுடன் இணைய தயார் – கமல்ஹாசன்

Admin

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Udhaya Baskar

ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Rajeswari

Leave a Comment