இயக்குனர் கே.பாலசந்தர் பிறந்தநாள் ஜூலை 9

Share

இயக்குநர் சிகரம் பாலசந்தரின் பிறந்தநாள் ஜூலை 9ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இரு பெரும் நட்சத்திரங்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த்தை கதாநாயகர்களாக அறிமுகம் செய்தவர் இயக்குநர் பாலசந்தர். சிரஞ்சீவி, ஜெயப்பிரதா, சுஜாதா, சரிதா என எண்ணற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் திறமைகளை வெளிக்கொணரச் செய்தவர் அவர். 1960 ஆம் ஆண்டில் தமிழ்த்திரையுலகில் அடியெடுத்து வைத்த பாலசந்தர், எம்ஜிஆர் நடித்த தெய்வத்தாய் படத்திற்கு வசனம் எழுதினார். பின்னர் சிவாஜி கணேசனை வைத்து எதிரொலி படத்தை எடுத்தார்.

நவீன வாழ்க்கையின் சிக்கல்களை மையமாக வைத்து படங்களை இயக்கிய சத்யஜித்ரே, மிர்னாள்சென், ரிஷிகேஷ் முகர்ஜி, ராஜ்கபூர் போன்றவர்களின் பாணியைக் கையாண்ட பாலசந்தர், நடுத்தர மக்களின் பிரச்சினைகளையும் பெண்களின் சிக்கல்களையும் தமது திரைப்படங்களில் துல்லியமாகப் படம்பிடித்துக் காட்டினார்.
முதுமை, முறை தவறிய உறவுகள், நிறைவேறாத காதல்கள், விவாகரத்து பெறும் பெண்கள், திருமணமாகாத முதிர்கன்னிகள், குடும்பத்திற்காக தன்னையே சந்தனமாகத் தேய்த்து உழைக்கும் பெண்கள் என அவரது கதாபாத்திரங்கள் வீடுதோறும் உள்ள பிரச்சனைகளை அப்படியே கண்முன்னே கொண்டுவந்தன.

அரங்கேற்றம் அவள் ஒரு தொடர்கதை அவர்கள் தப்புத் தாளங்கள் சிந்து பைரவி போன்ற படங்களில் இக்காலத்தில் பெண்களுக்கு தோன்றும் உணர்வுகளை சினிமாவில் கொட்டித் தந்தார். காதல், நகைச்சுவை போன்ற உணர்வுகளையும் மிக வித்தியாசமாகக் கையாண்டவர் பாலசந்தர்.
மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் படங்களை இயக்கிய பாலசந்தர் கமல்ஹாசனையும் ரதி அக்னிஹோத்ரியையும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தையும் இந்தி சினிமாவுக்கு வழங்கினார்.

திருவள்ளுவர் மீதும் பாரதி மீதும் மிகுந்த அபிமானம் கொண்ட பாலசந்தர் தமது படங்களில் அவர்களின் எழுத்துகளை தேவைப்படும் போது எல்லாம் பயன்படுத்திக் கொண்டார். பாலசந்தர் படங்களில் கணவரை விட்டு விலகிச் செல்லும் பெண்களும் மனைவியை விட்டு முறைதவறும் ஆண்களும் மீண்டும் தங்கள் குடும்ப வாழ்க்கைக்குத் திரும்புவதை கிளைமேக்ஸ் காட்சிகளில் கொண்டுவந்தார்.அதை சமரசம் என்று விமர்சித்தவர்கள் இப்போது யதார்த்தம் என்று ஒப்புக் கொள்கின்றனர்.
கடிகாரம், பொம்மை, விளம்பரப் பலகை போன்ற அஃறிணைகளையும் தமது படங்களில் நடிக்க வைத்தவர் இயக்குனர் பாலசந்தர்
பாலசந்தர் படைத்த படங்கள் காலங்களைக் கடந்து, இன்றும் திரையுலக ரசிகர்களால் வெகுவாகப் பாராட்டப்படுகின்றன.

நன்றி – செந்தூர் ஜெகதீஷ்


Share

Related posts

கல்லூரிகளில் ஆகஸ்ட் 9 முதல் ஆன்லைன் வகுப்புகள்

Rajeswari

வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: எல் முருகன்

Admin

திருச்சி பாரதிதாசன் பல்கலை. முதுநிலை தேர்வு அட்டவணை (2018 Batch)

Udhaya Baskar

ஜனவரி 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை

Admin

கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

Admin

“இனி கோயில்களில் தமிழில் அர்ச்சனையா..!?”

Udhaya Baskar

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Admin

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை !

Udhaya Baskar

ஒலிம்பிக்கில் வென்றால் ரூ.3 கோடி – அரசுக்கு பத்திரிகையாளர் சங்கம் நன்றி

Udhaya Baskar

மதுரை-போடி ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

Leave a Comment