“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” – திமுக சபதம்

Stalin_DheeranChinnamalai
Share

“மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” என்ற தீரன் சின்னமலை அவர்களின் கனவை நனவாக்க திமுக தொடர்ந்து பாடுபடும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கிண்டியில் அமைந்துள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் – அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நாட்டுப்பற்றுக்கும் – வீரத்திற்கும் இன்றைக்கும் தமிழக இளைஞர்களுக்கு அடையாளமாக விளங்கும் தீரன் சின்னமலை நாட்டிற்கு ஆற்றிய பணிகள் அளப்பரியது; பெருமைக்குரியது.

ஏழைகளுக்காக வரிப்பணத்தை வழிமறித்துக் கைப்பற்றிய போது, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையில் ஒரு சின்னமலை பறித்ததாகச் சொல்” என்று துணிச்சலாகச் சொன்னவர்! இளைஞர்களின் கனவு நாயகராகத் திகழும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்குப் பெருமை சேர்த்திட, சென்னை கிண்டியில் சிலை அமைத்தது, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த கழக ஆட்சிதான்! நினைவு அஞ்சல் தலை வெளியிடப்பட்டதும் கழகம் பங்கேற்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிதான் என்பதை இந்த நேரத்தில் நினைவுகூர்கிறேன்.

கொங்கு மண்டல இளைஞர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற வேண்டும் என்ற உயரிய நோக்கோடு கொங்கு வேளாளர் சமுதாயத்தைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தவரும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களே! “மக்களின் வரிப்பணம் ஏழைகளுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்” என்ற தீரன் சின்னமலை அவர்களின் கனவை நனவாக்க திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் தொடர்ந்து பாடுபடும் என்ற உறுதியை அவருடைய இந்த நினைவு நாளில் சபதமாக எடுத்துக் கொள்கிறேன். வாழ்க அவரது புகழ்! என்று பதிவிட்டுள்ளார்.


Share

Related posts

டாக்டர் ஆகணும்னா நீட் எழுதியே ஆகணும் ! உச்சநீதிமன்றம் திட்டவட்டம் !

Udhaya Baskar

சுதந்திர அணிவகுப்பு முடிந்த பின் தந்தைக்கு இறுதிச்சடங்கு – ஆய்வாளருக்கு சல்யூட் !

Udhaya Baskar

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Admin

48 மணிநேரத்தில் மழை ! வாங்கிவிட்டீர்களா குடை?

Udhaya Baskar

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

தமிழக அமைசரவையில் பாஜக இடம் பெறும்: எல் முருகன்

Admin

வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Udhaya Baskar

விழுப்புரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குடிசைகள் பற்றி எரிந்தன

Admin

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

Leave a Comment