‘எனக்கு உதவவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்’!.. பிரிட்டன் பிரதமருக்கு அதிர்ச்சி கொடுத்த டெல்லி பெண்

Share

டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பிரிட்டன் பிரதர் போரிஸ் ஜான்சனுக்கு , “எனக்கு உதவவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என்று குறிப்பிட்டு இமெயில் அனுப்பி, பெரும் அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

டெல்லியில் வசிக்கும் 43 வயதான அந்த பெண் பிரிட்டன் பிரதமருக்கு இமெயில் அனுப்பியுள்ளார். அதில் தனக்கு உதவவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.


இந்த மெயில் உடனே பிரிட்டன் பிரதமர் அலுவலகத்திலிருந்து இந்திய தூதரகத்துக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொள்ள வெளியுறவு அமைச்சகம் டெல்லி போலீசாருக்கு தெரிவிக்க டெல்லி போலீஸ் தலைமைச் செயலகமும் ரோஹிணி காவல் நிலைய போலீசாரும் இரவு 3 மணி நேரம் இந்தப் பெண்ணைக் கண்டுபிடித்து தற்கொலை முடிவைத் தடுக்கப் போராடியுள்ளனர்.

அவரது இமெயிலில் கொடுக்கப்பட்ட முகவரி பூர்த்தியடையாமல் இருந்துள்ளது. ரோஹிணி பகுதியில் செக்டார் 21-ல் முகவரி தெரியாததால் சுமார் 40 வீடுகளை போலீஸார் சோதனை செய்தனர்,

கடைசியாக ஒரு வீட்டைக் கண்டுப்பிடித்தனர், அந்த வீட்டின் உரிமையாளர் கதவைத் திறக்க மறுத்துள்ளார். பிறகு டெல்லி தீயணைப்பு வீரர்களை அழைத்து கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றுள்ளனர். அப்போது ஒரு பெண் ஹாலில் நின்று கொண்டிருந்தார். வீடு பூனைகளின் கழிவுகளினால் நாற்றம் அடித்துள்ளது. வீட்டுக்குள் சுமார் 16 பூனைகள் இருந்துள்ளன.

அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை போலீஸார் புரிந்து கொண்டனர், பெண் கான்ஸ்டபிளை அழைத்து அவரிடம் பேச வைத்த போது அந்தப் பெண் அழத்தொடங்கி விட்டார்.

அவர் விவகாரத்து பெற்று 10 ஆண்டுகளாக தனியாக வசிப்பதால் மன உளச்சலில் இருந்து வந்துள்ளது. இரண்டு மூன்று வருடங்களுக்கு முன் ஆசிரியை பணியை விட்டுவிட்டு தனித்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. வீட்டு வாடகை உள்ளிட்ட செலவீனங்களை சமாளிக்க முடியாததால் இதுபோன்ற இமெயில் அனுப்பியதாக கூறப்படுகிறது.

பின் அந்த பெண் மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லப்பட்டார்.


Share

Related posts

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

8 வழிச்சாலை வழக்கு: இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்

Udhaya Baskar

குழந்தை பெற்றெடுக்கும் மிஷின்தான் பெண்கள் ! நடிகை சர்ச்சை பேட்டி!

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

சாத்தான்குளம் சம்பவத்தை ரீமேக் செய்யும் நியூயார்க் போலீஸ் !

Udhaya Baskar

உங்கள் பெயரில் வேறொரு மொபைல் எண்ணை பயன்படுத்துகிறதா?

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

ராஜஸ்தானில் பெட்ரோல் 105, ஆந்திரா, தெலுங்கானாவில் 101

Udhaya Baskar

டிரெட்மில் மெஷினில் கால்பந்து ஆடி கின்னஸ் சாதனை

Udhaya Baskar

களரிபயட்டை தேசிய விளையாட்டாக அறிவித்ததற்கு சத்குரு வாழ்த்து

Admin

Leave a Comment