மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Share

ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை தமிழக அரசு கால அவகாசம் நீட்டித்துள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் மின் கட்டணம் செலுத்த மே 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இந்த காலஅவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் விதமாக மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை தமிழக அரசு இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சிறுகுறு தொழில்கள் மற்றும் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த மே 31 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத மின் கட்டணம் செலுத்தாத உயர் மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் ஜூன் 15ம் தேதி வரை செலுத்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிறு குறு தொழிற்சாலைகள் கூடுதல் வைப்புத்தொகை கேட்பு செலுத்தவும், தாழ்வழுத்த மின் நுகர்வோர் கூடுதல் வைப்புத்தொகை செலுத்தவும் ஜூன் 15வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மின்வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

முழு காரணமும் இந்தியா தான்! சீனாவின் அறிக்கை

Udhaya Baskar

அண்ணா பிறந்தநாள் – 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இஸ்லாமியரை விடுதலை செய்க!

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

தமிழகத்தில் மேலும் 5875 பேருக்கு கொரோனா !

Udhaya Baskar

இல்லத்தரசிகள் செய்யும் வேலைகளுக்கு அரசு ஊதியம்- கமல்ஹாசன்

Admin

கான்கிரீட் காடுகளிலும் வளரும் மூலிகை செடிகள்!!!

Udhaya Baskar

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

8 மாநிலத்திற்கு புதிய ஆளுநர்கள்

Udhaya Baskar

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

வாட்ஸ்ஆப்பில் Archived Chats Poster வசதி

Udhaya Baskar

தக்காளி வேனில் மதுபானம் கடத்தல்! போலீஸ் ரெய்டில் சிக்கியது!

Udhaya Baskar

மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Udhaya Baskar

Leave a Comment