ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Share

ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பயணிகளின் கிரெடிட் கார்டுகள், பாஸ்போர்ட் மற்றும் தொலைபேசி எண்கள் உள்ளிட்ட பல்வேறு வாடிக்கையாளர் தரவுகள் கசிந்துள்ளதாக இந்திய விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர் விபரங்கள் இணையத்தில் திருடப்பட்டுள்ளதால் 45 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி முதல் 2021ம் ஆண்டு பிப்ரவரி 3ம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களின் விவரங்கள் கசிந்துள்ளன. ஏர் இந்தியா விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களின் பெயர், பிறந்த தேதி, அவர்களின் தொடர்பு எண், கிரடிட் கார்டு விபரங்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் போன்றவை ஹேக் செய்யப்பட்டுள்ளன.

இந்த விபரங்கள் ஏர் இந்தியா விமான நிறுவனம் மட்டுமின்றி மலேசியா ஏர்லைன்ஸ், ஃபின் ஏர், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், லூஃப்தன்ஸா மற்றும் கேத்தே பசிபிக் போன்ற விமான நிறுவன வாடிக்கையாளர்களின் விபரங்களும் திருடப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து வாடிக்கையாளர்கள் கிரடிட் கார்டுகள் பாஸ்வேர்டை அடிக்கடி மாற்றுமாறு ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Share

Related posts

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா

Udhaya Baskar

மோடி மஸ்தான் வேலைகள் தமிழகத்தில் பலிக்காது – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கொரோனா நோயர்களின் இறப்புச் சான்றில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும்!

Udhaya Baskar

கிளைமாக்ஸ் ஷூட்டிங் – கோப்ரா படக்குழு தயார்

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் தயாராகி விட்டார்கள் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

ரம்ஜான் நலத்திட்ட உதவிகள் வழங்கினார் முதல்வர் எம்கேஎஸ்

Udhaya Baskar

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

பஸ்களில் 100% பயணிகளுக்கு தமிழக அரசு அனுமதி

Udhaya Baskar

ஓபிசி மசோதா திருத்தம் – மக்களவையில் நிறைவேறியது

Udhaya Baskar

Leave a Comment