தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூன் 14 வரை நீட்டிப்பு !

Share

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூன் 14 வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை சற்றே குறைந்துள்ள நிலையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதாவது கொரோனா தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளும், குறைவாக உள்ள மாவட்டங்களில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் தொற்று அதிகம் காணப்படுவதால் கீழ்க்கண்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு ஒரு நாளைக்கு 50 பத்திரப் பதிவுகள் மட்டும் நடைபெறும்.

தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள தளர்வுகள் என்னவென்று பார்ப்போம்.

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதைக் கடைகள் காலை 6.00 மணி முதல் மாலை 5 மணிவரை செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் மொத்த விற்பனைக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டு ஒரு நாளைக்கு 50 பத்திரப் பதிவுகள் மட்டும் நடைபெறும்.

தீப்பெட்டித் தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி.

அனைத்து அரசு அலுவலகங்களும் 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள் மற்றும் அலுவலகம், வீடுகள் அடுக்கு மாடி குடியிருப்புகளில் பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இபதிவுடன் அனுமதிக்கப்படும்.

எலக்ட்சிரிசியன், பிளம்பர், கம்ப்யூட்டர் சர்வீஸ், மோட்டார் சர்விஸ், எலக்ட்ரிக் கடைகள், மிதிவண்டி, இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடைகள், கல்வி புத்தகங்கள், எழுதுபொருட்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதி.

வாகன பழுதுபார்க்கும் மையங்களுக்கு அனுமதி. விற்பனை நிலையங்கள் அனுமதி இல்லை.

வாடகை வாகனங்கள், டேக்ஸிகள், ஆட்டோக்களில் இபதிவுடன் செல்ல அனுமதி.

Share

Related posts

நடிகர் ரஜினிகாந்த் திடீர் பெங்களூரு பயணம்

Udhaya Baskar

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றும் தாளிசாதி சூரணம்!

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

தமிழகத்தில் ஜனவரி 19ல் பள்ளிக்கூடங்கள் திறப்பு

Admin

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

Leave a Comment