கணவன் மனைவி குத்துச் சண்டை! பால்கனி சரிந்து விழுந்தது!

Share

ரஷ்யாவில் தம்பதியினரிடையே பால்கனியில் ஏற்பட்ட சண்டை விபரீதமாக மாறியுள்ளது.

தம்பதிகளுக்கு இடையிலான சண்டை சில நேரங்களில் மிகவும் வித்தியாசமாகவும், மோசமானதாகவும் இருக்கும். அப்படி, சமீபத்தில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள ஒரு தம்பதியினர் இடையே ஏற்பட்ட தீவிர வாக்குவாதம் திகிலூட்டும் தருணமாக மாறியது.

தம்பதியினர் இரண்டாவது மாடியில் உள்ள தங்கள் வீட்டு பால்கனியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த பொழுது, திடீரென பால்கனி இடிந்து விழுந்தது. அதில் தம்பதியினர் 25 அடி உயரத்தில் இருந்து கீழேயுள்ள நடைபாதையில் விழுந்தனர்.

அவர்கள் இருவருக்கும் கைகால்கள் உடைந்து பலத்த காயங்கள் ஏற்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இதுதொடர்பாக செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அதிகாரிகள் கட்டிடத்தின் உறுதி தன்மை குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இந்த ஜோடி அடுத்தமுறை சண்டையை வாய் வழியாக பேசி தீர்த்துக்கொள்வது நல்லது. சூடான வாதங்கள் சில நேரங்களில் பேரழிவு தரும் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்பதை இச்சம்பவம் பதிவு செய்கிறது.


Share

Related posts

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

மழையால் பாதிக்கபட்ட சாலைகளை சீரமைக்க பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

Admin

234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் – மு.க.ஸ்டாலின் உறுதி

Admin

4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

Admin

அரசு ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும்

Admin

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

இனி 24 மணி நேரமும் RTGS சேவை மூலம் பணம் அனுப்பலாம்

Admin

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Admin

சென்னையிலிருந்து ரேணிகுண்டாவுக்கு இனி ஒன்றரை மணி நேரத்தில் பயணம் செய்யலாம்

Admin

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

Leave a Comment