ஆவினில் முறைகேடு! முழுமையான விசாரணை தேவை – பால் முகவர் சங்கம்

Share

ஆவினில் முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ள தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம், அது குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கத்தின் நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்தகால அதிமுக ஆட்சியில் ஆவின் நிறுவனத்தில் சீனியர் பேக்ட்ரி அசிஸ்டெண்ட், பொது மேலாளர், மேலாளர் என ஒவ்வொரு பணியிடங்களுக்கும் 10 லட்சம் ரூபாய் முதல் 50 லட்சம் ரூபாய் வரை விலை வைத்து, அப்பணியிடங்களை தகுதியற்றோருக்கு பணத்திற்காக விற்பனை செய்து படித்த, திறமையான இளைஞர்களின் அரசு பணி எனும் கனவில் மண் அள்ளிப் போட்ட கும்பல் மீது ஆவின் நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனர் திரு. கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் மனதார பாராட்டுகிறது, வரவேற்கிறது.

அதே நேரம் ஜனவரி-1 முதல் ஜூன்-15 வரை மட்டும் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளது எனும் கோணத்தில் விசாரணை நடத்தாமல் கடந்த 10 ஆண்டுகளில் ஆவினில் நடைபெற்ற அனைத்து பணி நியமனங்கள் குறித்தும் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்பட வேண்டும்.

அத்துடன் தமிழகம் முழுவதும் உள்ள பால் மொத்த குளிர்விப்பான் நிலையங்கள் (BMC), பால் குளிரூட்டும் நிலையங்களில் (MCC) நடைபெறும் பல லட்சம் ரூபாய் பால் கொள்முதல் மோசடிகள், பால் விநியோகம் மற்றும் விற்பனையில் ஆவினின் கூட்டுறவு சங்க விதிகளை மீறி செயல்பட்டு தங்களின் சுயலாபத்திற்காக C/F ஏஜென்ட் நியமனம் செய்து அதன் மூலம் செய்த பல கோடி ரூபாய் முறைகேடுகள், ஆரூத்ரா உள்ளிட்ட பல்வேறு தனியார் பால் நிறுவனங்களுக்கும், இடைத்தரகர்களுக்கும் குறைந்த விலைக்கு பால் மற்றும் பால் பவுடர் (SMP) வழங்கி அதனால் ஏற்பட்ட பல கோடி ரூபாய் இழப்புகள், BMC, MCCகளில் கொள்முதல் செய்யப்பட்டு, பால் பண்ணைகளில் பேக்கிங் செய்து விற்பனை போக உபரியாகும் பாலினை பவுடராக மாற்றுவதில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடுகள், பால் பண்ணைகளுக்கு தேவையின்றி வாங்கிப் போடப்பட்டு, துருப்பிடித்துப் போய் பயன்பாடற்ற நிலையில் இருக்கும் இயந்திர தளவாடங்கள் மூலம் நடந்த ஊழல்கள் போன்றவற்றையும் விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்து முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும், விசாரணையில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள், அமைச்சர்கள் என எவராக இருந்தாலும் அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்து ஆவின் நிறுவனத்தின் கணக்கில் சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

மேலும் ஆவினில் கடந்த காலங்களில் நடைபெற்ற ஊழல்கள், முறைகேடுகள் தொடர்பாக தாமதமின்றி உரிய விசாரணை நடத்தப்பட்டால் தோண்டத் தோண்ட பல கோடி ரூபாய் ஊழல்கள், முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வரும். அவ்வாறு வெளிச்சத்திற்கு வரும் தவறுகள் மீது தாமதமின்றி விரைவான நடவடிக்கை எடுக்கப்படுமானால் ஆவினிற்கு தமிழக அரசு மானியம் வழங்காமலேயே நல்ல லாபத்தில் இயங்க வைக்க முடியும்.

அதுமட்டுமின்றி இதுவரை பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான பல கோடி ரூபாய் நிலுவை தொகையை உடனடியாக வழங்கிடவும், வருங்காலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கான தொகையை நிலுவையின்றி பணப்பட்டுவாடா செய்யவும் முடியும்.

எனவே நேர்மையான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுவை அமைத்து உரிய விசாரணைக்கும், நடவடிக்கைக்கும் உத்தரவிடுமாறு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Share

Related posts

முகக்கவசத்தை விழுங்கி உயிருக்கு போராடிய சைபேரியன் ஹஸ்கி

Udhaya Baskar

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு!?

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

ரஜினியின் புதிய கட்சி பெயர், சின்னம் என்ன தெரியுமா?

Admin

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிப்பு

Admin

மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத சலுகை – ஏர் இந்தியா

Admin

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Admin

15 அடி நீளப் பாம்பு, பதைபதைத்துப் போன மக்கள், நடந்தது என்ன?

Udhaya Baskar

எம்ஜிஆர் ஆட்சியை நம் முதல்வரால் மட்டுமே தர முடியும்- அமைச்சர்

Admin

வேலியே பயிரை மேய்ந்த கதை ! இளையராஜா கைது!

Udhaya Baskar

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

Leave a Comment