இரத்த அழுத்த மாத்திரைகள் உயிர் காக்கும்! கழிவு நீர் நோயை பரப்பும்.. கொரோனா பற்றிய ஆய்வு முடிவுகள்

Share

இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் கொரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதாக ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது. அதே சமயம் கொரோனா வைரஸ் கழிவு நீர் மூலம் பரவுகிறது என்றும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

கொரோனா எனப்படும் கோவிட்-19 குறித்து பல ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதில், தற்போது வெளியாகியுள்ள இரண்டு ஆய்வு முடிவுகளில் ஒன்று மகிழ்ச்சியையும், மற்றொன்று அதிர்ச்சியையும் தருவதாக இருக்கிறது.

முதலாவது உயர் இரத்த அழுத்த மாத்திரைகள்

உயர் இரத்த அழுத்தத்திற்கு எடுத்துக் கொள்ளும் மாத்திரைகள், கொரோனா இறப்பு விகிதத்தை குறைப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இது தொடர்பான தங்களது ஆய்வு முடிவை மருத்துவ இதழ் ஒன்றில் வெளியிட்டுள்ளனர்.

அந்த ஆய்வில் இரத்த அழுத்ததிற்கான மாத்திரைகள் எடுக்கும் கொரோனா நோயாளிகள் மற்றும் இரத்த அழுத்ததிற்கான மாத்திரைகள் எடுக்காத கொரோனா நோயாளிகளை கொண்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில், உயர் இரத்த அழுத்ததிற்கு மாத்திரைகள் எடுக்கும் கொரோனா நோயாளிகளின் இறப்பு விகிதம் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது.

கழிவுநீர் மூலம் பரவும் கொரோனா

இஸ்ரேலின் பென் குரியன் பல்கலைக்கழகத்தின் சார்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா வைரஸ் கழிவு நீரின் மூலம் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், பல தொற்றுகளுக்கு வித்திடுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், கழிவு நீரிலிருந்து பரவும் கொரோனா வைரஸ் வீரியமிக்கதா? என்பது பற்றிய முடிவுகள் வெளியிடப்படவில்லை.

அதேநேரம் கழிவு நீரில் இருந்து கசிந்து மற்ற இடங்களுக்கு செல்கையில் காற்று மூலமாக தொற்று ஏற்படும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. கழிவு நீர் ஏரிகள், ஆறுகளில் கலந்து விடும் போது தொற்று அதிகமாக பரவலாம் என்றும் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கழிவு நீர் மூலம் விளைவிக்கும் காய், கனிகள் மூலமும் கொரோனா தொற்று பரவலாம் என்பது அவர்களின் கூற்று.


Share

Related posts

டெல்லிக்குள் விவசாயிகள் நுழைய தடை விதிப்பு

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு முகாமை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தல்

Admin

பாஜகவில் இணைந்தார் மநீம பொதுச்செயலாளர்

Admin

செப்.1 முதல் தமிழகத்தில் நூலகங்கள் திறப்பு ! படிப்பாளிகள் மகிழ்ச்சி !

Udhaya Baskar

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

இயக்குநர் சேதுமாதவன் காலமானர்

Udhaya Baskar

பெண்கள் சுயதொழில் செய்ய இலவச பயிற்சி

Udhaya Baskar

அரியலூருக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் ! உயிர்காக்க உதவியது இந்தோனேசியா தமிழ்ச்சங்கம்!

Udhaya Baskar

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

Leave a Comment