நடிகர் புகழால் புகழின் உச்சிக்கு சென்ற கடை ; ஒரே நாளில் திறப்புவிழாவும், மூடுவிழாவும் !

cook with comali pugazh
Share

நெல்லையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் ஆன நடிகர் புகழ் திறந்து வைத்த கடை ரசிகர்கள் கூட்டத்தால் அன்றே இழுத்து மூடப்பட்டது.

இதனால் பல லட்சங்கள் செலவு செய்து திறப்பு விழா ஏற்பாடு செய்திருந்த செல்போன் உதிரிபாக கடை உரிமையாளர் நெல்லை மாநகராட்சிக்கு அபராதமும் செலுத்த நேரிட்டது.

நெல்லையில் புதிய செல்போன் உதிரிபாகம் கடை ஒன்றின் உரிமையாளர் நாதார்ஷா என்பவர். இவர் தன்னுடைய கடையை நெல்லையில் பிரபலப்படுத்த நடிகர் ஒருவரை அழைத்து வந்து திறப்பு விழா ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு பல லட்சங்கள் செலவு செய்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் புகழ் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து கடை திறப்பு விழாவுக்கு வந்த நடிகர் புகழ் கடையை திறந்து விட்டு தனது புதிய காரில் ஏறி நின்ற போஸ் கொடுத்தார். அப்போது நடிகர் புகழுடன் செல்பி எடுக்க முரட்டு ரசிகர்கள் முண்டியடித்தனர். ஏராளமான ரசிகர்கள் திரண்டாதால் கொரோனா விதிமுறைகள் விதி மீறல்கள் ஆனது. தகவல் அறிந்து வந்த போலீசார் லத்தியை சுழற்றி கூட்டத்தை களைத்தனர். நடிகர் புகழும் விட்டால் போதும் என்று அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். பின்னர் கடைக்கு வந்த நெல்லை மாநகராட்சி அதிகாரிகள், கொரோனா விதிமுறையை புதிய கடை திறப்பு விழாவில் பின்பற்றவில்லை என திறந்த அன்றே கடையை இழுத்துப்பூட்டி சீல் வைத்தனர்.

இந்த கவனத்தை அரசு அதிகாரிகள் தேர்தல் சமயத்தில் காட்டியிருந்தால் தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை இவ்வளவு வேகத்தில் பரவி இருக்காது என்பதே பெரும்பாலோனாரின் கருத்தாக உள்ளது.


Share

Related posts

தமிழக மக்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி- முதலமைச்சர்

Admin

வங்கக்கடலில் உருவாகும் புதிய காற்றழுத்தம்… மீண்டும் ஒரு புயலா???

Udhaya Baskar

சென்னை பல்கலை.யில் தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து – பா.ம.க. நிறுவனர் வரவேற்பு

Udhaya Baskar

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

கோயம்பேடு மார்க்கெட் காய்கறி விலை

Udhaya Baskar

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

Coca-Cola பாட்டில்களை அகற்றியா ரொனால்டோ, தண்ணீர் குடியுங்கள் என சமிக்கை!

Udhaya Baskar

அதிக கோபம்; அதிக வேகம்; போட்டியிலிருந்து ஜோகோ தகுதி நீக்கம் !

Udhaya Baskar

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

மாஃபியா போல் மாறியதா பாலிவுட் சினிமா துறை – கங்கனா ரனாவத்

Udhaya Baskar

ரேஷன் கடைகளில்15 பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு

Udhaya Baskar

கண்தானம் வழங்கிய தமிழக முதலமைச்சர் !

Udhaya Baskar

Leave a Comment