தமிழகத்தில் தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல்…

Share

தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு தளவுர்களற்ற கடும் ஊரடங்கு அமல் படுத்தப்படுகிறது.

இந்த முழு ஊரடங்கு 24.05.2021 காலை முதல் நடைமுறைக்கு வரும்.இந்த முழு ஊரடங்கு காலத்தில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்:

முழு ஊரடங்கு காலத்தில் மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள் இயங்க அனுமதி

பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகத்திற்கு அனுமதி

காய்கறிகள் மற்றும் பழங்கள் வாகனங்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்யப்படும்

தலைமைச் செயலகத்திலும் மாவட்டங்களிலும் அத்தியாவசிய துறைகள் மட்டும் இயங்கும்

தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும்

இன்றும், நாளையும் மட்டும் தனியார், அரசுப் பேருந்துகள் வெளியூர் செல்ல அனுமதிக்கப்படும்

அனைத்து கடைகளும் இன்று இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி

அனைத்து கடைகளும் நாளை காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை செயல்பட அனுமதி

மின்னணு சேவை – காலை 8மணி முதல் மாலை 6மணி வரை செயல்பட அனுமதி

மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இபதிவு தேவை இல்லை

உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

உணவகங்களில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

உணவகங்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு அனுமதி

பார்சல் சேவை அனுமதிக்கப்பட்ட நேரங்களில் ஸ்விகி, ஜெமோட்டோ மூலம் உணவுக்கு டெலிவரிக்கு அனுமதி

காலை 6 முதல் 10 வரை, மதியம் 12 மணி முதல் 3மணி வரை, மாலை 6மணி முதல் இரவு 9 மணி வரை உணவகங்களில் பார்சல் சேவைக்கு அனுமதி

பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் செயல்படும்

ஏடிஎம் எந்திரங்கள் செயல்பட தடையில்லை

வேளாண் விளைபொருட்கள், இடுபொருட்கள் கொண்டு செல்ல அனுமதி

சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்

உரிய மருத்துவக்காரணங்கள் மற்றும் இறப்புகளுக்காக மட்டும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்

செய்தி மற்றும் ஊடக நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கலாம்

மால்கள் ஏற்கனவே அறிவித்திருந்ததை போல் திறக்க அனுமதி இல்லை.

இன்று இரவு ஒன்பது மணி வரையும் நாளை ஒரு நாள் மட்டும் காலை 6மணி முதல் இரவு 9மணி வரை அனைத்து கடைகளும் திறக்க அனுமதி.

இதுதொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், ” பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை 24.05.2021 முதல் மேலும் ஒரு வார காலத்திற்கு முழுமையாக எவ்விதத் தளர்வுகளுமின்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்றும்.

” பொது மக்கள் அனைவரும் ஒத்துழைத்து, ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே நோய்த் தொற்று பரவலைக் குறைக்க முடியும் என்பதால், ஏற்கனவே 13.05.2021 அன்று அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களால் முன்மொழியப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்றை இந்த அரசு அமைத்தது.

இதனைத் தொடர்ந்து இன்று (22.05.2021) இந்தக் குழுவுடன் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை கலந்து ஆலோசித்தபோது, அவர்கள், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்ற வகையில், பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, கொரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன” என்று கூறியுள்ளார்.


Share

Related posts

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

மாநிலத்தின் உரிமைகளைப் விட்டுகொடுப்பதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது – கமலஹாசன்

Admin

வரலட்சுமி விரதம் வழிபடும் முறைகள்

Udhaya Baskar

தமிழகத்தில் ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Udhaya Baskar

பிரபல நடிகரின் மனைவிக்கு நீதிமன்றம் எச்சரிக்கை

Admin

“மனமும், மனதில் இரக்கமும் இருந்தால் மார்க்கம் உண்டு!” – மு.க.ஸ்டாலின் அறிக்கை

Udhaya Baskar

குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் – கமல் உறுதி

Admin

போதைப்பொருள் விவகாரம் – நடிகை அன்ட்ரிதா ராய் பெயர் அடிபடுவது ஏன்?

Udhaya Baskar

பறவை காய்ச்சல் எதிரொலி: முட்டை விலை குறைவு

Admin

ஆன்லைன் சதுரங்கப் போட்டி – சீனச் சிறுவனை தோற்கடித்த சென்னைச் சிறுவன்

Udhaya Baskar

பணம் கட்டிட்டா பாஸா? அதெல்லாம் முடியாது ! ஏஐசிடிஇ கெடுபிடி !

Udhaya Baskar

Leave a Comment