ஊரடங்கால் பாதித்தோருக்கு நிவாரணம் – மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Share

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (30.05.2021) கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில், கழகத்தின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியைத் தொடங்கி வைத்தார்.

கோவை மாவட்டத்தில் உள்ள 10,17,620 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 கிலோ அரிசி, 500 மி.லி சமையல் எண்ணெய், 500 கிராம் பருப்பு, 500 கிராம் சர்க்கரை, 1 கிலோ உப்பு, 250 கிராம் மஞ்சள், 100 கிராம் டீ தூள் ஆகிய 7 வகையான அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் பணியை மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது பொற்கரங்களால் தொடங்கி வைத்தார்கள்.

இதேபோல், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் 300 முன்களப் பணியாளர்களுக்கு அரிசி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, மாண்புமிகு வீட்டு வசதித் துறை அமைச்சர் திரு. சு.முத்துசாமி, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு. மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.


Share

Related posts

குழந்தைகளை குறிவைக்கும் மூன்றாம் அலை??? அரசும், பெற்றோரும் என்ன செய்ய வேண்டும்…

Udhaya Baskar

போக்குவரத்துக்கழக பஸ்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு

Admin

சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் சேவை அதிகரிப்பு

Admin

அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடு கோரி சமூக நீதி கட்சி ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

முதல்வரின் இலவச தடுப்பூசி அறிவிப்புக்கு எதிராக பாஜக புகார்

Admin

போலி நகைகளை மார்வாடிகளிடம் அடகு வைத்தவர் கைது! 21 லட்சம் அபேஸ் செய்தவர் போலீஸ்வசம்!

Udhaya Baskar

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு சம்மன்

Admin

காதலியை பார்க்க எல்லைத் தாண்டிய வீரன் ! 4 ஆண்டுகள் கம்பி எண்ணிய பரிதாபம் !

Udhaya Baskar

கடன் தவணை நீட்டிக்க வாய்ப்பில்லை ! இனி ஈஎம்ஐ கட்டியே ஆகவேண்டும்

Udhaya Baskar

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Admin

விரைவில் சி.பி.எஸ்.இ. 10, 12 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை

Admin

Leave a Comment