தந்தைக்கு பிறந்தநாள் ! மக்கள் சேவையாற்றும் மகன் ! குடும்ப அட்டைதாரர்கள் குதுகூலம் !

Share

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு விலையில்லா 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம் மற்றும் கோயில் அர்ச்சகர்களுக்கு உதவித் தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் இன்று தொடங்கப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துவிட்டதால் மே மாதம் 10 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந் நிலையில், பொதுமக்களின் சிரமத்தை போக்க ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 13 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு நியாய விலை கடைகள் மூலம் ஜூன் மாதம் முதல் வழங்க தமிழக முதல்வர் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தார்.

2.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ள பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

கோதுமை மாவு- 1 கிலோ
உப்பு- 1 கிலோ
ரவை- 1 கிலோ
சர்க்கரை- 500 கிராம்
உளுத்தம் பருப்பு- 500 கிராம்
புளி- 250 கிராம்
கடலை பருப்பு- 250 கிராம்
கடுகு- 100 கிராம்
சீரகம்- 100 கிராம்
மஞ்சள் தூள்- 100 கிராம்
மிளகாய் தூள்- 100 கிராம்
குளியல் சோப்பு (125 கிராம்)- 1
துணி துவைக்கும் சோப்பு (250 கிராம்)- 1
டீத்தூள்

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 3ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மேலும் மே 5 சனிக்கிழமை முதல் நியாயவிலை கடைகள் வாயிலாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக எந்த தேதி, நேரத்திற்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த 1ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதேசமயம், இந்து சமய அறநிலைத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களின் பூசாரிகள், பட்டாச்சாரியர்கள் ஆகியோருக்கு 4 ஆயிரம் ரூபாய் உதவித்தொகையுடன், ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 15 வகை மளிகை பொருட்கள், 10 கிலோ அரிசி போன்றவற்றை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.


Share

Related posts

கர்நாடக அணைகளில் இருந்து 53,000 கனஅடிநீர் திறக்கப்பட்டது !

Udhaya Baskar

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

64 லட்சம் பேருக்கு வேலை தரவில்லை ! வெளிப்படையாக சொன்ன தமிழக அரசு !

Udhaya Baskar

புதியதாக யார் கட்சி தொடங்கினாலும் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை

Admin

குறிப்பிட்ட முக்கிய மருந்துகளுக்கு ‘ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு’

Udhaya Baskar

ஏர் இந்தியா இணையதளத்தில் சைபர் தாக்குதல்

Udhaya Baskar

இந்தியாவின் முதல் ஏசி ரயில் முனையம் பெங்களூரில் ! பயன்பாட்டுக்குத் தயார் !

Udhaya Baskar

பால் முகவர்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் – பொன்னுசாமி

Udhaya Baskar

டிசம்பர் 29 முதல் டாஸ்மாக் பார்கள் செயல்பட தமிழக அரசு அனுமதி

Admin

புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை – மத்திய அரசு உத்தரவு

Udhaya Baskar

திரையரங்குள் 100 சதவீத பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதி

Admin

Leave a Comment