கிளைமாக்ஸ் ஷூட்டிங் – கோப்ரா படக்குழு தயார்

Share

டைரக்டர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும், கோப்ரா படப்பிடிப்பின் இறுதிக் காட்சிகள் விரைவில் கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வித்தியாசக் கதைகளுடன் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் கோப்ரா. தமிழில் உருவாகும் கோப்ரா திரைப் படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் உருவாகி வருகிறது. KGF படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் 8 கெட் அப்புகளில் விக்ரம் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். இவர் இசையில் வெளியான தும்பி துள்ளல் என்கிற பாடல் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது.

கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்தபோது கொரோனா திடீர் என தலைத் தூக்கியதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் நடிகர் விக்ரம், பொன்னியின் செல்வன் மற்றும் தன்னுடைய மகனுடன் நடித்து வரும் படத்தில் பிஸியானதால் இப் படத்தின் பணிகள் தாமதமானது. தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதால் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விரைவில் கொல்கத்தாவில் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Share

Related posts

சென்னையில் தடையை மீறி திமுக போராட்டம்

Admin

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

ஜல்லிக்கட்டு நடத்த அரசு அனுமதி

Admin

மோசடி நபர்களிடம் ஏமாறாதீர் என ரயில்வே எச்சரிக்கை

Admin

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

குற்றப்பத்திரிகை என்றால் என்ன?

Udhaya Baskar

குடும்ப கட்டுபாடு செய்யுங்கள் என யாரையும் கட்டாயப்படுத்த முடியாது

Admin

பயிரை மேய நினைத்த வேலியை வேரோடு பிடுங்குக – சு.ஆ.பொ.

Udhaya Baskar

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

சசிகலா வெளியே வந்து எடப்பாடிக்கு ஆப்பு வைப்பார்- உதயநிதி

Admin

மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்

Udhaya Baskar

Leave a Comment