மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்

Share

சென்னை:
மருத்துவ கல்லூரிகளில் டிசம்பர் 7ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியுள்ளன.

கொரோனா நோய்த்தொற்று காரணமாக கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன. மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் நடப்பு கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும் நேரடி வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பது தொடர்ந்து கேள்விக்குறியாகவே இருந்து வந்தது. இதையடுத்து அந்தந்த மாநில அரசுகள் கொரோனா தன்மையை கருத்தில் கொண்டு கல்லூரிகளை திறக்கலாம் என்று மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் தெரிவித்தன.

கொரோனா தொற்று பரவலால், பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லுாரிகள், பல்கலைகள் அனைத்தும், இன்று முதல் திறக்கப்பட்டு, இறுதியாண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லுாரிகளில் மட்டும், இளநிலை, முதுநிலை என, அனைத்து வகுப்புகளும் இன்று துவங்கப்படுகின்றன.

கொரோனா தொற்றுநோய் பரவலால், மார்ச்சில் பள்ளி, கல்லுாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, புதிய கல்வி ஆண்டு துவங்கிய பிறகும், பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளதால், கல்லுாரிகள், பல்கலைகளை திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது.

இதன்படி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகளில், முதுநிலை படிப்பில், இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு, டிச., 2 முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. இதையடுத்து, அனைத்து வகை கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், இளநிலை மற்றும் முதுநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்க உள்ளன.

வழிமுறைகள் என்ன?

  • வகுப்புகளில் நெருக்கமாக மாணவர்கள் அமரவோ, நிற்கவோ கூடாது. சமூக இடைவெளிக்கு வாய்ப்பில்லாத நிலையில், பாட திட்டம் சாராத இணை கல்வி நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க வேண்டாம்
  • வெளியாட்கள், செயல்முறை வகுப்பு எடுக்கவும், வேறு பணிகளுக்கு வருவதையும் அனுமதிக்க வேண்டாம்
  • மாணவர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சானிடைசர் மற்றும் சோப்பால், கைகளை சுத்தம் செய்ய, ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும்
  • கல்லுாரிக்கு வர இயலாத மாணவர்களுக்கு, ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும். வெளிநாட்டு மாணவர்களுக்கும், ஆன்லைனில் பாடம் நடத்த வேண்டும்சுழற்சி வகுப்புகள்
  • இட பற்றாக்குறை இருந்தால், 50 சதவீத மாணவர்களை வைத்து, சுழற்சி முறையில் பாடம் நடத்தலாம். வாரம் ஆறு நாட்களும் கல்லுாரிகள், பல்கலைகள் இயங்க வேண்டும்
  • பேராசிரியர்கள், பணியாளர்களும், கொரோனா தடுப்பு முறைகளில் அக்கறை காட்ட வேண்டும்
  • விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்கள், உணவை பார்சலாக பெற்று செல்ல அனுமதிக்க வேண்டும். உணவறையில் கூட்டம் கூடக் கூடாது. உணவு வழங்கும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்
  • நுழைவு வாயிலில், மாணவர்களின் உடல் வெப்பநிலை சோதித்த பின் அனுமதிக்க வேண்டும். கொரோனா பாதித்து, சிகிச்சை பெற்று வரும் மாணவர்களிடம், பாரபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது
  • தொற்று அறிகுறி உள்ளவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு, பல்வேறு வழிகாட்டு முறைகள் கூறப்பட்டுள்ளன.

Share

Related posts

என்னது ஸ்கூல் திறக்கறீங்களா? நாங்க புள்ளைங்கள அனுப்ப மாட்டோம்…

Udhaya Baskar

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

இந்தியாவிலேயே நெசவாளர்களுக்கு வீடு வழங்கிய அரசு தமிழக அரசு தான்: முதல்வர்

Admin

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

கீழமை நீதிமன்றங்கள் முழு அளவில் இயங்க அனுமதி

Admin

திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – முதல்வர்

Admin

சென்னை அல்லது மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கப்படும்…

Admin

கிறிஸ்தவ சமூகத்துக்கு பாதுகாப்பு அரணாக விளங்குவோம்: துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம்

Admin

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வர்களுக்கான விதிமுறைகள் !

Udhaya Baskar

சென்னை பல்கலை.யில் தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து – பா.ம.க. நிறுவனர் வரவேற்பு

Udhaya Baskar

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

Leave a Comment