அப்பா மாதிரி கோமாளி ஆக மாட்டேன் ! கலெக்டர் ஆவேன் – நகைச்சுவை மன்னன் மகன் சீரியஸ் !

Chinni-Jayanth-Son-Sruthan-Jai
Share

தென்னிந்திய திரையுலகில் நகைச்சுவை நடிகராக பல வருடங்களாக வலம் வந்த சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவர் சின்னி ஜெயந்த். ஏராளமான படங்களில் கதாநாயகர்கள் கல்லூரியில் படித்தால் கூட படிக்கும் நண்பனாக கண்டிப்பாக சின்னி ஜெயந்த், விவேக், சார்லி ஆகியோர் வந்துவிடுவர். இதனால் எப்போதும் இவர்கள்தான் கல்லூரி மாணவர்களாக என்ற விமர்சனமும் நகைச்சுவையாக பேசப்பட்டு வந்தது.

பிசியான நகைச்சுவை நடிகராக வலம் வந்த சின்னி ஜெயந்த் குணச்சித்திர வேடங்களிலும் நடிப்பை வெளிப்படுத்தியவர். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் மகன் ஸ்ருதன் ஜெய் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். அதோடு தேசிய அளவில் 75வது இடத்தையும் பிடித்துள்ளார்.

இது குறித்து சின்னி ஜெயந்த், “முதல் முறை எழுதிய தேர்வில் பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் இரண்டாவதாகத் தேர்வு எழுதி என் மகன் வெற்றி பெற்றுள்ளார். இது எனக்கு பெருமைமிக்க தருணம்” என்று கூறியுள்ளார். சினிமா குடும்பத்தில் இருந்து ஒருவர் ஐஏஎஸ் தேர்வுக்கு சென்று வெற்றி பெற்றது இதுவே முதல்முறை என கூறப்படுகிறது.


Share

Related posts

சுங்கச்சாவடிகளில் கட்டாயமாகிறது பாஸ்டேக்

Admin

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

திருவாரூரில் தற்காலிக பணியாளர்களுக்கு பணிநியமன ஆணை! அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார் !

Udhaya Baskar

ஸ்விக்கி ஊழியர் பிரச்சனை – மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

பிரபல பாடலாசிரியர் மருத்துவமனையில் அனுமதி

Admin

ஊதிய உயர்வு கொடுக்காத முதலாளி ! ஊழியரிடமே பணத்தை பறிகொடுத்த பரிதாபம் !

Udhaya Baskar

குற்றால அருவியில் குளிக்க தடை நீட்டிப்பு

Admin

சாலையில் காய்கறி வாங்கலாம் ! சிம் கார்டு வாங்காதீர்கள்!

Udhaya Baskar

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி..!

Udhaya Baskar

Hatsun ஆலையில் அம்மோனியா கசிவு, சுருண்டு விழுந்த தொழிலாளர்கள் ! துணை முதலமைச்சர் அதிர்ச்சி

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

Leave a Comment