தலைகீழாக தொங்கியபடி 111 அம்புகள் எய்த 5 வயது குழந்தை !

Share

சென்னையில் வசித்து வரும் 5 வயது குழந்தை சஞ்சனா தலைகீழாக தொங்கியபடியே 13 நிமிடங்களில் 111அம்புகள் எய்து கின்னஸ் சாதனை பெற முயற்சித்துள்ளார். இதற்காக கடந்த சனிக்கிழமை தயார் ஆன 5 வயது குழந்தை சஞ்சனா, தலைகீழாக தொங்கிய நிலையில், 13 நிமிடங்களில் 111 அம்புகளை எய்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து பேசிய வில்வித்தை பயிற்சியாளர் சிகான் ஹுசைனி “பயிற்சி பெற்றவர்கள் கூட 4 நிமிடங்களில் 6 அம்புகளைத்தான் வீசுகிறார்கள், அதாவது 20 நிமிடங்களில் 30 அம்புகள் மட்டுமே எய்தலாம். ஆனால் சஞ்சனா மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்றும் இச்சாதனையை சரிபார்ப்புக்காக கின்னஸுக்கு அனுப்பப் போகிறோம்” என்றும் கூறினார்.

இது குறித்து சஞ்சனாவின் தந்தை “10 வயதுக்கு பிறகு சஞ்சனாவுக்கு ஒலிம்பிக் அம்பு எறிதலுக்கான பயிற்சியை தொடங்கவுள்ளோம். எதிர்காலத்தில் என் மகள் நம் நாட்டிற்காக நிச்சயமாக பல பதக்கங்களை பெற்றுத்தருவார்” என்று கூறினார்.

தலைகீழாக தொங்கியபடி 13 நிமிடத்தில் 111 அம்புகள் எறிந்த, சென்னையை சேர்ந்த 5 வயது சிறுமி சஞ்சனாவின் செயல் கின்னஸ் உலக சாதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

திருக்கோவில் டிவியின் அரசாணை வெளியீடு

Admin

சுயத்தொழில் செய்வோர் E-PASS மேற்கொள்ள தனி வசதி

Udhaya Baskar

கொரோனா முன்களப் பணியாளர்களை கவுரவப்படுத்தும் விழா!

Udhaya Baskar

வேல் யாத்திரை மிகப் பெரிய எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது: எல் முருகன்

Admin

கலைஞர் சிலை ! காணொலியில் திறப்பு ! மு.க.ஸ்டாலின் உரை

Udhaya Baskar

தமிழகம் மீட்போம்! – திமுக சிறப்பு பொதுக்கூட்டங்கள்

Udhaya Baskar

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

முட்டை விலை மேலும் 10 காசுகள் உயர்வு

Udhaya Baskar

விவசாயிகளுக்கு நிலுவை தொகையை உடனுக்குடன் செலுத்த வேண்டும்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Admin

ஜனவரி 4ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அறிவிப்பு

Admin

சென்னை அல்லது மதுரையில் கொரோனா தடுப்பூசி திட்டம் துவக்கப்படும்…

Admin

ராஜேஷ் கோட்சே மீது நடவடிக்கை தேவை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment