சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

ammoniam
Share

லெபனான் நாட்டில் 100க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய வெடிவிபத்துக்கு காரணமான அம்மோனியம் நைட்ரேட் 740 மெட்ரிக் டன் சென்னை மணலியில் இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து மணலி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் வேதிப் பொருள் பாதுகாப்பாக இருக்கிறது என சுங்கத்துறை அதிகாரிகள் பதில் அளித்துள்ளனர்.

2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் 6 ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பு வைக்கப்பட்டிருந்ததால் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்தில் 138 பேர் பலியாகியுள்ளனர். 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் சென்னை மணலியில் 740 மெட்ரிக் டன் அளவிற்கு அம்மோனியம் நைட்ரேட் 5 ஆண்டுகளாக இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அம்மன் கெமிக்கல்ஸ் நிறுவனம் கடந்த 2015ம் ஆண்டு அனுமதியின்றி இறக்குமதி செய்த 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து வைத்துள்ளனர். இந்த வழக்கை வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உரிய அனுமதி பெறாமல் இறக்குமதி செய்த வேதிப்பொருளை ஏலம் மூலம் அப்புறப்படுத்த உத்தரவிட்டது.

8 மாதங்கள் ஆன பிறகும் அமோனியம் நைட்ரேட் சுங்கத்துறைக்கு சொந்தமான யார்டில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. இதனால் லெபனானை போன்ற வெடிவிபத்துக்கு வாய்ப்பிருப்பதாக அச்சம் எழுந்தது. ஆனால் அம்மோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதனை சுற்றி குடியிருப்புகள் எதுவும் இல்லை என்பதால் மக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும் சுங்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் அந்த வேதிப்பொருள் நீதிமன்ற உத்தரவின் படி ஏலம் விடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


Share

Related posts

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

சு.ஆ. பொன்னுசாமி தாயார் காலமானார் !

Udhaya Baskar

ஹைட்ரோ கார்பன் எடுக்க ஏலம்! விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

Udhaya Baskar

அடுத்த கல்லூரிகள் திறக்கப்படும்- முதல்வர்

Admin

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

Test

Udhaya Baskar

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

முன்னாள் மத்திய அமைச்சர் பூட்டாசிங் மறைவுக்கு மருத்துவர் அய்யா இரங்கல்

Admin

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

மீண்டும் 5 காசு உயர்ந்தது முட்டை விலை!

Udhaya Baskar

மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Admin

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

Leave a Comment