சண்டிகரில் 104 வயது தடகள வீராங்கனை

Share

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த மான் கவுர் கடந்த 1916ல் பிறந்தவர். பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கின் அரண்மனையில் பணிப்பெண்ணாக வேலை செய்தவர். 1934 இல் திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகளுடன் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார்.

மான் கவுரின் மகன் குருதேவ் சிங் இருந்தே விளையாட்டு போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார். இதை பார்த்த மான் கவுருக்கு தடகள வீராங்கனையாக உருவாக வேண்டுமென்ற ஆசை 93வது வயதில் வந்துள்ளது. தாயின் விருப்பத்தை ஏற்று அம்மாவுக்கு தடகளத்தில் பயிற்சி கொடுக்க ஆரம்பித்துள்ளார் மகன் குருதேவ். தன்னுடைய தடகள பயிற்சியை மான் கவுர் 2009 இல் தொடங்கினார். தொடர்ந்து மகன் கொடுத்த ஊக்கத்தோடு ஓட்டத்தில் வேகத்தையும், பலத்தையும் காட்டினார் மான் கவுர்.

தினமும் அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்து, தனது வேலைகளையெல்லாம் முடித்துக்கொண்டு 6 மணிக்கெல்லாம் பயிற்சி களத்தை அடைந்து விடுவார். 40 நிமிடங்கள் பயிற்சியை முடித்துக் கொண்டு வீடு திரும்புவார். தினமும் 20 கிலோ மீட்டர் தூரம் ஓடுவதை வாடிக்கையாக கொண்ட அவர் 2009 இல் துவங்கி இன்றுவரை தினந்தோறும் இந்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.

முதலில் தேசிய அளவில் தனது திறமைகளை வெளிக்காட்டிய மான் கவுர் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டத்திலும், ஈட்டி மற்றும் குண்டு எறிதலிலும் ஒரு ரவுண்டு வந்துள்ளார். தேசிய அளவிலான போட்டிகளில் 13 தங்க பதக்கங்களை வென்றுள்ளார் . அதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவிலான முதியோர் தடகள போட்டிகளிலும் தனக்கென தனி முத்திரை பதித்துள்ளார்.

கனடா, மலேசியா, நியூஸிலாந்து, சிங்கப்பூர், தைவான் என சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் மொத்தமாக 31 தங்க பதக்கங்களையும் வென்றுள்ளார். கடந்த ஆண்டு போலந்தில் நடைபெற்ற மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டம், ஈட்டி மற்றும் குண்டு எறிதல் என நான்கு ஈவென்ட்டுகளில் தங்க பதக்கம் வென்றிருந்தார். உலகிலேயே 104 வயதில் அதிவேகமாக ஓடும் தடகள வீராங்கனை என்ற சாதனை மான் கவுருக்கு மட்டுமே. இவர் பெயர்தான் மான். செயலில் சிங்கம்.


Share

Related posts

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

இ.பாஸ் – தமிழகத்தில் புதிய தளர்வுகள்

Udhaya Baskar

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

மருத்துவமனையில் கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடிய எஸ்.பி.பி!

Udhaya Baskar

43 ஆயிரத்துக்கு மேல போறீயே தங்கமே தங்கம் !

Udhaya Baskar

கலைஞரின் நினைவு நாள் – கழகத்தலைவரின் காணொலி உரை

Udhaya Baskar

புதிய நாடாளுமன்ற கட்டுமான பணிக்கு தடை

Udhaya Baskar

எனக்கு பழைய கார்தான் வேண்டும் ! ரசிகர்களிடம் உதவி கேட்கும் சச்சின் !

Udhaya Baskar

தெருவில் மின்விளக்கு வேண்டும் ! இருளை போக்க வேண்டும் !

Udhaya Baskar

Leave a Comment