குன்னூரில் தடுப்பூசி தயாரிக்க மத்திய அரசின் அனுமதி வேண்டும் – மா.சுப்பிரமணியன்

Share

தமிழக அரசின் தீவிர நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனாவின் தொற்று பெருமளவு குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குன்னூரில் உள்ள தடுப்பூசி தயாரிப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவேண்டும் என தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டை தொகுதி எம்எல்ஏவும் மக்கல் நல்வாழ்வுத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கான சிறப்பு சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். பின்னர் கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தற்காலிக பணி நியமன ஆணையை வழங்கினார். மேலும் மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மளிகைப் பொருட்களையும் அவர் வழங்கினார்.

அதன் பின்னர் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன் அங்கு கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தை ஆய்வு செய்தார். இந்நிகழ்வில் சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர்.மதிவேந்தன், சுகாதார துறை செயலாளர் டாக்டர்.ராதாகிருஷ்ணன், சட்ட மன்ற உறுப்பினர்கள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் பின்னர் அளித்த பேட்டியில்,

தமிழக அரசு எடுத்துள்ள தீவிர நடவடிக்கையால் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 938 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கருப்பு பூஞ்சை நோய்க்கு இதுவரை 3840 தடுப்பூசிகள் வந்துள்ளன. மேலும் 35,000 தடுப்பூசி மருந்துகள் தேவைப்படுகிறது. 1907-ஆம் ஆண்டு குன்னூரில் தொடங்கப்பட்ட தடுப்பூசி நிறுவனம் மத்திய அரசின் சுகாதார செயலரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. அந்த தடுப்பூசி நிறுவனத்தில் மாதம் ஒரு கோடி தடுப்பூசி மருந்துகளை குப்பியில் நிரப்பி வழங்குவதற்கான வசதிகள் உள்ளது. அந்த நிறுவனத்தில் தடுப்பூசி தயாரிப்பதற்கு மத்திய அரசு அனுமதி தந்து அதற்கான மூலப்பொருட்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Share

Related posts

அமித்ஷாவுக்கு கொரோனா தொற்று – விரைவில் குணமடைய தலைவர்கள் ஆவல் !

Udhaya Baskar

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

ஆட்டோக் கட்டணத்தில் திருத்தம் தேவை – தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

+2 தேர்வுகள் ரத்து; நீட், நாட், கேட் தேர்வுகள் எதற்கு – இராமதாசு

Udhaya Baskar

விரைவில் தோ்தல் பிரசாரத்தைத் தொடங்குவேன்: மதிமுக அறிவிப்பு

Admin

பக்கிங்ஹாம் கால்வாயில் சுற்றுச்சூழல் மீட்டெடுப்பு பணிகள் விரைவில் துவக்கம்

Admin

மக்களை காப்பாற்ற கவிஞனாக மாறிய காவல் கண்காணிப்பாளர் !

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

முட்டை விலை 55 காசுகள் குறைவு

Rajeswari

இஸ்ரேலுடன் கைகோர்க்கும் இஸ்லாமிய நாடுகள் – பாலஸ்தீனத்தின் நிலை?

Udhaya Baskar

உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Udhaya Baskar

Leave a Comment