பாதத்தில் எரிச்சல் ஏற்படுகிறதா? உங்களுக்கான தீர்வு !

Share

பாத எரிச்சல் என்றால் அதற்கு காரணம் சர்க்கரை நோய்தான் என்பது பலருடைய நம்பிக்கை. இதற்கு சர்க்கரை நோய் மட்டும் காரணம் இல்லை. இரத்தத்தில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகமாக இருக்கும் போதும் பாதங்களில் எரிச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். யூரிக் அமில அளவால் ஏற்படும் பிரச்சனையை கூறும் சொல்தான் கீல்வாதம்.

கீல்வாதமானது கால்களைத் தான் பாதிக்கும். உடலில் ப்யூரின் என்ற புரோட்டீன் அதிகரிக்கும்போது யூரிக் அமில அளவை அதிகரிக்க வழிவகுக்கிறது. அசைவ உணவுகளை அதிகம் உண்பவர்களுக்கு தான் யூரிக் அமில அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே பாத எரிச்சலால் அவதிப்படுபவர்கள் கடல் உணவுகள், இறைச்சிகள் உண்பதைத் தவிர்க்கலாம். அதிக புரோட்டீனைத் தவிர்க்கவும்.

புரோட்டீனை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போது, கல்லீரலால் அவற்றை நன்கு செரிக்க முடியாமல் உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. மதுபானம் குடிப்பவர்களுக்கு ஆல்கஹால் உடலை வறட்சியடையச் செய்வதோடு, உடலில் யூரிக் அமில அளவு அதிகரிக்க தூண்டும். ஆல்கஹால் அருந்தும் போது, சிறுநீரகமானது ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலம் மற்றும் இதர கழிவுகளை வெளியேற்றுவதற்கு பதிலாக, இரத்தத்தில் இருக்கும் ஆல்கஹாலை பிரித்தெடுப்பதால் இது நிகழ்கிறது.

உடலில் அதிகப்படியான யூரிக் அமில அளவைக் குறைக்க ஆப்பிள் அதிகம் உதவுகிறது. ஆப்பிளை உணவில் சேர்க்க வேண்டும். ஏனெனில் ஆப்பிளில் மாலிக் அமிலம் அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள யூரிக் அமிலத்தை நடுநிலையாக்குகின்றன. இதனால் அதிக யூரிக் அமில நிலையுள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது. அதேபோல் ஆப்பிள் சீடர் வினிகரை உட்கொள்வது நல்லது.

ஒரு டம்ளர் நீரில் 3 டீஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்து குடிக்கலாம். நாள் ஒன்றுக்கு 2-3 முறை குடிக்கலாம். ஆப்பிள் சீடர் வினிகரைக் குடிப்பது, அதிக யூரிக் அமில நிலைக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. அதேபோல் தண்ணீரை தினமும் அதிகம் பருகினால், உடலில் உள்ள நச்சுக்கள், அதிகப்படியான யூரிக் அமிலம் சிறுநீரின் வழியே வெளியேறி விடும்.

செர்ரி பழங்கள் யூரிக் அமில அளவைக் குறைக்க உதவக்கூடியது. எனவே கீல்வாத பிரச்சனை உள்ளவர்களை செர்ரிப் பழங்களை அதிகம் சாப்பிட பரிந்துரைக்கிறார்கள். பெர்ரிப் பழங்களான ஸ்ட்ராபெர்ரி, ப்ளூபெர்ரி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்க்கும் போது, இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் அமிலத்தைத் தடுக்க உதவும்.

அதேபோல் கேரட் ஜூஸ், பீட்ரூட் ஜூஸ், வெள்ளரிக்காய் ஜூஸ் மூன்றையும் ஒன்றாக கலந்து குடித்து வந்தால், அதிகப்படியான யூரிக் அமில அளவு குறையும். அதேபோல் அன்றாடம் கொழுப்பு குறைவான பால், தயிரை உட்கொள்ளுங்கள். மேலும் வைட்டமின் சி உணவுப் பொருட்களான எலுமிச்சை, ஆரஞ்சு, கிவி, நெல்லிக்காய், தக்காளி போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதிகளவு யூரிக் அமில அளவைக் கொண்டவர்கள், சமையலில் கோல்ட்-பிரஸ்டு ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தலாம். மேலும் ஓட்ஸ், ஆப்பிள், ப்ராக்கோலி, பேரிக்காய், வெள்ளரிக்காய், செலரி, பார்லி, வாழைப்பழம் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.


Share

Related posts

தடையை மீறி உண்ணாவிரதம்: 2000 பேர் மீது வழக்கு

Admin

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Rajeswari

புயலால் பாதிக்கப்பட்ட 5 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.600 கோடி இடுபொருள் நிவாரணம் – முதல்வர்

Admin

பள்ளிகள் திறப்பு எப்போது? – அமைச்சர் பதில்

Admin

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

தளர்வில்லா முழு ஊரடங்கில் எவற்றுக்கெல்லாம் அனுமதி?

Udhaya Baskar

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.896 உயர்வு

Udhaya Baskar

கடலூர் பயணமாகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

Udhaya Baskar

எடப்பாடி பேச்சுக்கு துரைமுருகன் பதிலடி

Admin

வேளாண் சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பில்லை : முதல்வர் விளக்கம்

Admin

Leave a Comment