சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

beela rajesh
Share

முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. புகார் தொடர்பாக விசாரணை நடத்த தலைமை செயலாளருக்கு, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை கடிதம் அனுப்பியுள்ளது. மேலும் சுகாதாரத்துறை முன்னாள் செயலாளர் மீதான சொத்துகுவிப்பு வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் தற்போது தமிழக அரசின் வணிக வரித்துறை செயலாளராக உள்ளார். ஊரடங்கு காலத்தில் தையூர் அருகே பிரம்மாண்ட வீடு ஒன்று கட்டி கிரகபிரவேசம் செய்ததாக புகார் எழுந்ததாகவும், அதன் அடிப்படையில் அவர் சுகாதாரத்துறையில் இருந்து வணிகவரித்துறைக்கு மாற்றப்பட்டதாகவும் புகார் எழுந்திருந்தது. இது தொடர்பான புகார் ஒன்று தமிழக அரசின் உள்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது.

அந்த புகார் தொடர்பாக டெல்லியில் இருக்கும் மத்திய ஊழல் கண்காணிப்புத்துறைக்கும் புகார் அனுப்பி வைக்கப்பட்டது. அந்த புகாரில் கொட்டிவாக்கத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பு வீடு பீலா ராஜேசுக்கு இருப்பதாகவும், சூளைமேட்டில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் வீடு ஒன்று இருப்பதாகவும், 1.25 ஏக்கரில் 2 கோடி ரூபாய் மதிப்பு விவசாய நிலம் இருப்பதாகவும், அதேபோல் 7500 சதுர அடி விவசாய நிலம் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் இருப்பதாகவும், 3.98 ஏக்கர் நிலம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் கொடைக்கானலில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் 2100 சதுர அடியில் வீடு இருப்பதாகவும், நெற்குன்றத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் 1.4 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு வீடு இருப்பதாகவும், அதில் இருந்து வருமானம் வருவதாகவும், அதில் சில குளறுபடி இருப்பதாகவும் அதில் இருந்து வரும் வருவாய் அதிகம் வந்தது போல வருமானவரித் தாக்கல் செய்திருப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு கடிதம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.


Share

Related posts

26 ஸூரத்துஷ்ஷுஃரா 26.01-26.227

Udhaya Baskar

Daypay தபால்துறையின் புதிய செயலி அறிமுகம்

Admin

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

தங்கம் விலை மேலும் சரிந்தது

Udhaya Baskar

நோய் ஏற்படாமல் தவிர்க்க நடவடிக்கை – அமைச்சர் தகவல்

Udhaya Baskar

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

பொன்னை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு

Udhaya Baskar

ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்தன

Udhaya Baskar

9 மாதங்கள் கழித்து திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி

Admin

தமிழிசையை கட்டாயப் பாடமாக்க வேண்டும் – மருத்துவர் ராமதாஸ்

Udhaya Baskar

சென்னை விமான நிலையத்தில் தங்க கட்டிகள் கடத்திய 2 பேர் கைது

Admin

Leave a Comment