நோய் தொற்று மையமாக மாறி வரும் மொழிப்போர் தியாகிகள் மயானம்

Share

வடசென்னை பகுதியில் தியாகிகள் பலரின் கல்லறைகள் உள்ள மயானம் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுவதாகவும், நோய் தொற்று மையமாக மாறி வருவதாக குற்றம் சாட்டிய பால் முகவர்கள் சங்கம் மயானத்தை பராமரிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறத்தி உள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்தி எதிர்ப்பு போரில் சிறை சென்று மடிந்த மொழிப்போர் தியாகிகளான திரு. தாளமுத்து, திரு. நடராசன் மற்றும் தமிழ்மொழி உரிமைக்காகவும், சமூக நீதிக்காகவும் போராடிய மருத்துவர். தர்மாம்பாள் ஆகியோரது கல்லறைகள் மூலக்கொத்தளம் பகுதியில் உள்ள மயானத்தில் அமைந்துள்ளது.

125 ஆண்டுகால மயானத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால் சிதிலம் அடைந்து சுற்றுச்சூழல் மாசுக்கு சவால் விடும் அளவிற்கு சீரழிந்து வருவதோடு, மயானத்தின் சுற்றுச்சுவர் தகர்க்கப்பட்டு சமூகவிரோதகளின் கூடாரமாகவும் மாறி வருவதோடு, மூலக்கொத்தளம் சுற்றுவட்டார பகுதிகளின் நோய் தொற்று மையமாகவே மாறி வருகிறது.

மேலும் அந்த மயானத்தில் ஏற்கனவே அடக்கம் செய்யப்பட்டவர்களின் மண்டை ஓடுகளும், மனித எலும்புகளும் ஆங்காங்கே குப்பைகள் போல குவிந்தும், சிதறிக் கிடப்பதும், புதைக்கப்பட்ட சடலங்களின் எழும்புக் கூடுகள் மயானப் பகுதியின் உள்வெளியில் கிடப்பதும் கடும் அதிர்ச்சியளிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 35.43 ஏக்கரில் அமைந்திருந்த மயானத்தின் ஒருபகுதியில் 11.51 ஏக்கரில் அங்குள்ள குடிசைப்பகுதி மக்களுக்கு மத்திய அரசின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் சுமார் 138.29 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தால் கட்டி வழங்கப்பட்டது.

தற்போது அந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் மயானத்தில் குட்டை போல் தேங்கி கொசுக்களின் உற்பத்தி மையமாகவும் மாறி வருவதை “கோவிட்-19” பெருந்தொற்று காலத்தில் கூட மாநகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாதது வேதனைக்குரியது.

சென்னையில் பல்வேறு மயானங்களில் பூங்காக்கள், கான்கிரீட் சாலைகளோடு ஓய்வறைகளும் அமைக்கப்பட்டு முன் மாதிரி மயானங்களாக திகழும் போது மொழிப்போர் தியாகிகள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள மூலக்கொத்தளம் மயானத்தை சென்னை மாநகராட்சி முறையாக பராமரிக்காதது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.

இந்நிலையில் அதே வரிசையில் வடசென்னை பகுதியில் சுகாதார சீர்கேட்டை உருவாக்கி மற்றொரு நோய் தொற்று மையமாக மாறி வரும் மூலக்கொத்தளம் மயானத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் நேரிடையாக சென்று கள ஆய்வு செய்வதோடு, சமூக விரோதிகளின் கூடாரமாக, கட்டட கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்காக மாறியுள்ள அம்மயானத்தை சுற்றி உயரமான சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும்.

மேலும் மயானத்தை தூய்மைப்படுத்தி மொழிப்போர் தியாகிகளின் கல்லறைகள் உள்ளிட்ட அனைத்து கல்லறைகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் அவற்றை பாதுகாத்திடவும், மயானத்தின் பயன்பாடற்ற பகுதியில் மரக்கன்றுகள் நட்டு, தோட்டம்,, பூங்கா, பொதுக்கழிப்பிடம், விளையாட்டுத்திடல் அமைத்து அம்மயானத்தை முன்மாதிரி மயானமாக மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம்.


Share

Related posts

கன்னியாகுமரி தொகுதி எம்.பி வசந்த்குமார் உடல்நிலை கவலைக்கிடம்!

Udhaya Baskar

கிளைமாக்ஸ் ஷூட்டிங் – கோப்ரா படக்குழு தயார்

Udhaya Baskar

கொரோனா இருந்தா நீங்களே டாக்டர் ஆகிடாதீங்க, ஆஸ்பத்திரிக்கு வாங்க !

Udhaya Baskar

ஆகஸ்ட் 17 மின்தடை – எங்கெங்கு தெரியுமா?

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

சென்னையில் 740 மெட்ரிக் டன் அம்மோனியம் ! மணலி மக்கள் அதிர்ச்சி

Udhaya Baskar

கட்சி தொடங்கி 24 மணி நேரத்தில் ஆட்சி அமைக்க முடியுமா?- மு.க.ஸ்டாலின்

Admin

சென்னை வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் பாதையில் சோதனை ஓட்டம்

Admin

பட்டா மாறுதல் தொடர்பாக முக்கிய தீர்ப்புகள்

Udhaya Baskar

கிராம நிர்வாக அலுவலகத்தில் அடிப்படை வசதி தேவை

Udhaya Baskar

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

Leave a Comment