தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது!

Share

2020-21 ஆம் நிதியாண்டின் தனிநபர் வருமானத்தில் இந்தியாவை வங்கதேசம் முந்தியுள்ளது.

சுதந்திரம் பெற்ற பிறகு வறுமையில் தவித்து வந்த வங்கதேசம் தற்போது சீராக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் கரோனா தொற்று மத்தியிலும் வங்கதேசத்தில் தனிநபர் வருமானம் கடந்த நிதியாண்டைக் காட்டிலும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் திட்ட அமைச்சர் எம்.ஏ.மன்னன் தெரிவித்தார்.

2020-21 ஆம் நிதியாண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 2,227 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 2,064 ஆக இருந்தது.

வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் இந்தியாவுடன் ஒப்பிடும்போது 280 டாலர்கள் அதிகமாகும். இந்தியாவில் 2020-21ஆம் நிதியாண்டில் தனிநபர் வருமானம் 1947 டாலர்களாக உள்ளது. கொரோனா காரணாமாக நாடு தழுவிய பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்தியாவின் தனிநபர் வருமானம் சரிந்திருக்கிறது. இதற்கு முந்தைய நிதி ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் 9 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இது தொடர்பான கணிப்பை ஐ.எம்.எப் வெளியிட்டிருந்து. அதில், டாலர் அடிப்படையில் இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட வங்கதேசத்தின் வருமானம் உயரும் என ஐ.எம்.எப். கூறியிருந்தது.

மேலும், வங்கதேசத்தில் வேலைக்கு செல்வதில் பெண்களின் பங்களிப்பு 37 சதவீதமாக இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 21 சதவீதமாக இருக்கிறது. தனிநபர் வருமானம் உயர்வதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம். தவிர, இந்த பெருதொற்று காலத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையில் இருந்தது. ஆனால், வங்கதேசத்தின் வளர்ச்சி குறைந்தாலும் எதிர்மறையில் செல்லவில்லை.

2007-ம் ஆண்டு இந்தியாவின் தனிநபர் வருமானத்தை விட வங்கதேசத்தின் தனிநபர் வருமானம் ஒப்பிடும்போது பாதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ நடிகை தற்கொலை வழக்கில் விரைவில் உண்மை வெளிவரும் – அமைச்சர்

Admin

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க மோட்டார் சைக்கிளை எரித்த பெண்

Admin

சென்னையில் மினி கிளினிக் திட்டம் துவக்கம்

Admin

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

பால் முகவர்கள் வாழ்வில் விடியல் பிறக்கட்டும் – பொன்னுசாமி

Udhaya Baskar

கலைஞர் பிறந்தநாள் – அன்னதானம் செய்த எம்எல்ஏ ஜோதி !

Udhaya Baskar

யோகா, நேச்சுரோபதி படிப்புக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 வரை அவகாசம் !

Udhaya Baskar

இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது – முதலமைச்சர் உறுதி

Admin

விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை

Admin

மதுக்கடைகள் திறப்பு ! அன்புமணி கண்டிப்பு !

Udhaya Baskar

Leave a Comment