வாழைப்பழம் 3,336 ரூபாய் ! கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்!

Share

ஒரு கிலோ வாழைப்பழம் சுமார் 3,336க்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. கவலை வேண்டாம் நேயர்களே இந்த விலை நிர்ணயம் கோயம்பேட்டில் அல்ல கொரியாவில்.

வட கொரியாவில் கிம் ஜங் யுன் தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது. உலக நாட்டுத் தலைவர்களின் எச்சரிக்கையை மீறி அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டதால் வட கொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் உதவிகளும், பொருட்களும் கிடைப்பது நின்றதால் வடகொரியாவில் மருத்துவ கட்டமைப்பு மிக மோசமாக உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020 துவக்கத்தில் தன் எல்லையை வட கொரியா மூடியது. இதனால் சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து பொருட்கள் வருவது நின்றன. முக்கியமாக உணவு, உரம், எரிபொருள் உள்ளிட்டவை வருவது நின்றன. மேலும் கடந்தாண்டு சூறாவளி, வெள்ளம் என இயற்கை சீற்ற பாதிப்பும் அதிகமாக இருந்தது. இவையனைத்தும் சேர்ந்து, தற்போது வட கொரியாவில் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு கிலோ வாழைப்பழம் 3,336 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிளாக் டீ ஒரு பாக்கெட் 5,167 ரூபாய்க்கும்; காபி 7,381 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன.

பல உணவு பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து தட்டுப்பாடு நிலவுவதால் வட கொரிய மக்கள், தினமும் இரண்டு வேளை மட்டும் கஞ்சி போன்ற உணவை சாப்பிடுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. உரத் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக உரம் தயாரிக்க, ஒவ்வொரு விவசாயியும் தினமும் 2 லிட்டர் சிறுநீர் அளிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது.


Share

Related posts

உழவனாய் இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் – முதல்வர்

Admin

2021 ஜனவரியில் ஜெயலலிதா நினைவிடம் அரசிடம் ஒப்படைக்கப்படும்- பொதுப்பணித்துறை

Admin

நவம்பர் முதல் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

Udhaya Baskar

ஆர்.டி.ஓ. மீது கோபம்… ஆட்டோவுக்கு தீ வைத்த ஓட்டுநர் !

Udhaya Baskar

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Udhaya Baskar

கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Admin

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

பிரபல கட்டுமான நிறுவனத்தில் வருமானவரி அதிகாரிகள் ரெய்டு

Admin

குக்கிராமத்திற்கும் தடையில்லா மின்சாரம் ! திமுக அமைச்சர் ஏற்பாடு !

Udhaya Baskar

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

Admin

Leave a Comment