ஆகஸ்ட் 13 தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத் தொடர்

Share

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி முதல் செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆகஸ்ட் 13ம் தேதி பொது பட்ஜெட், ஆகஸ்ட் 14ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திமுக பொறுப்பேற்ற பிறகு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான முதல் பொது பட்ஜெட் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார்.

தமிழக அரசின் நிதிநிலை குறித்து நிதியமைச்சர் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்திருந்தார். அதில், வருவாய் பற்றாக்குறை ரூ.61,320 கோடி எனவும், கடந்த 10 ஆண்டுகளில் மாநில வரி வருவாய் வளர்ச்சி 4.4% ஆக சரிந்துள்ளது எனவும், ஒவ்வொரு குடும்பத்தின் தலையிலும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாக தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி பாக்கி 20,033 கோடி ரூபாய் மத்திய அரசு தர வேண்டியுள்ளது என தெரிவித்த அமைச்சர், கடந்த அதிமுக அரசின் தவறான நிதி மேலாண்மையால் இத்தகைய சரிவு ஏற்பட்டதாகக் குற்றம் சாட்டினார். மேலும் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்துவது குறித்து தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ஆகஸ்ட் 13ம் தேதி தொடங்கும் கூட்டத்தொடர், செப்டம்பர் 21ல் நிறைவடைகிறது. பட்ஜெட் மீதான விவாதம் 3 நாட்கள் நடைபெறும் எனவும், அதைத் தொடர்ந்து துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

மேகதாது அணை குறித்து அன்புமணி இராமதாஸ் அறிக்கை

Udhaya Baskar

களப்பணிகளில் உற்றதுணையாக இருந்த தம்பி இராதாவுக்கு வீரவணக்கம் – திருமா.

Udhaya Baskar

கிளைமாக்ஸ் ஷூட்டிங் – கோப்ரா படக்குழு தயார்

Udhaya Baskar

மலைவாழ் மக்களுக்கு மளிகைப் பொருட்கள்!

Udhaya Baskar

ரயில்கள் தாமதம் -பொங்கியெழுந்த பொன்னேரி மக்கள்

Rajeswari

மினி கிளினிக் ஒரு தேர்தல் நாடகம்: ஸ்டாலின்

Admin

சென்னை பல்கலை.யில் தமிழ் பாடவேளைகள் குறைப்பு ரத்து – பா.ம.க. நிறுவனர் வரவேற்பு

Udhaya Baskar

மாநில உரிமைகள் பறிபோவதை தடுக்க நடவடிக்கை தேவை – இராமதாசு

Udhaya Baskar

ரூ.3 ஆயிரத்தில் ஸ்மார்ட் போன் ! விநாயகர் சதுர்த்தியன்று ரிலீஸ் !

Udhaya Baskar

விரைவில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்: ஸ்டாலின்

Admin

காவிரி டெல்டாவில் நெல் கொள்முதல் அளவை 2 மடங்காக உயர்த்துக ! – இராமதாசு

Udhaya Baskar

வாட்ஸ்அப் டைப் அடிக்காமல் மெசேஜ் அனுப்புவது எப்படி?

Udhaya Baskar

Leave a Comment