ஆடியில் ஆடி கார் ஆஃபர்! வெறும் 99.99 லட்சம்தான்

Share

ஆடி மாதம் தொடங்கி விட்டது. புடவை வியாபாரிகளும், நகைக் கடை வியாபாரிகளும் ஆடி மாதச் சலுகையாக போட்டிப் போட்டு தள்ளுபடி என்ற பெயரில் தங்கள் வியாபார யுக்திகளை பயன்படுத்தி பெண்களை கடைக்கு வரவழைக்கின்றனர். பொதுவாகவே ஆடி மாதம் என்பது புதிதாக திருமணம் ஆன மணமக்களுக்கு மனக் கஷ்டம் கொடுக்கும் மாதம் என்றாலும், இந்த மாதத்தில் கோயில்களில் முக்கிய வழிபாடுகள் நடைபெறுகிறது. எனவே இந்த மாதம் மிகுந்த சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

இந்த வரிசையில், நாங்களும் சளைத்தவர்தகள் அல்ல என்பதை நிரூபிக்க ஆடி நிறுவனம் பேட்டரியில் இயங்கும் புதிய 3 மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது.

அதாவது, வெறும் 99,99 லட்சம் கொடுத்தால் போதும் நீங்களும் இந்த சொகுசு காருக்கு உரிமை கொண்டாடலாம். ஆடி நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய மாடல் கார்கள் இ-டிரான் 50, இ-டிரான் 55 மற்றும் இ-டிரான் ஸ்போர்ட்பேக் 55 (e-tron 50, e-tron 55 and e-tron Sportback 55). இந்த மூன்று மாடல்களும் தற்போது இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்பட்டு வருகின்றன. இந்தக் காரின் அதிகபட்ச விலை ரூ.1.18 கோடி மட்டுமே.

இந்த கார்களில் திறன் மேம்படுத்தப்பட்ட ஸ்டியரிங், ஏர் சஸ்பென்சன் ஆகியவை இடம்பெற்றுள்ளது. இ-டிரான் 50 காரில் 71 கிலோ வாட்ஸ் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இ-டிரான் 55 காரில் 95 கிலோ வாட்ஸ் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

ஜெர்மன் கார் சந்தையில் எப்போதும் இல்லாத அளவிற்கு விற்பனை ஆகும் இந்த எலக்ட்ரிக் கார் ஒரு வரப் பிரசாதம். அதாவது மெர்சிடிஸ் பென்ஸ் ஈக்யூசி மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் போன்றவை போல இந்த கார் உள்ளது. ஆடி இ-ட்ரான் இந்தியாவில் விற்பனைக்கு வந்த முதல் சொகுசு மின்சார கார் என்று கருதப்பட்டது, ஆனால் கொரோனா பரவல் காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

Battery Capacity: 71kwh
Motor Type: Electric motor
Fuel Type: Electric(Battery)
Max Power: 230, Max Torque: 540, Emission Norm Compliance: ZEV, Transmission: Automatic, Drive Type AWD, Kerb Weight
2445 Kg, Charging: Fast Charging Not Available in e-tron, Performance and Fuel Economy Top Speed 190 Km/h 0-100 kmph
6.8 Sec
Seating Capacity 5, Doors 5, Exterior Dimensions LengthWidthHeight 501419761686 mm Wheelbase, 2928 mm, Comfort and Convenience, Heated Seats Rear, Not Available in e-tron, Heated Seat Front Not Available in e-tron


Share

Related posts

கொரோனா தடுப்பூசி போடவில்லை என்றால் நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் உத்தரவு

Udhaya Baskar

தேனீர், சலூன் கடைகளை திறக்க அனுமதி வேண்டும் – பால் முகவர்கள் சங்கம்

Udhaya Baskar

தேர்தல் செலவுகள் வரம்பு அதிகரிப்பு: தேர்தல் ஆணையம்

Admin

முகப் பொலிவுக்கு வாழைப்பழ முகக் கவசம் – ரகுல் ப்ரீத் சிங்

Udhaya Baskar

தமிழ்நாட்டில் மீத்தேன் ஷேல் கேஸ் எடுக்க அனுமதி இல்லை – அமைச்சர் தங்கம் தென்னரசு

Udhaya Baskar

விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Udhaya Baskar

மழலையர் ஆரோக்கியத்திற்கு அங்கன்வாடி மையம்! விஜயதாரணிக்கு பாராட்டு!

Udhaya Baskar

முக ஸ்டாலினுக்கு சவால் விடுத்த முதலமைச்சர்

Admin

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

நாளை முதல் மளிகைப் பொருள்கள் விற்பனைக்கு அனுமதி

Udhaya Baskar

புரெவி புயலால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட அதிகாரிகள் குழு அமைப்பு: மத்திய அரசு

Admin

சென்னை ஐஐடி விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை

Admin

Leave a Comment