அரியலூரில் போதைக்காக சானிடைசர் குடித்தவர் பலி! 2 பேருக்கு தீவிர சிகிச்சை

Share

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர். மேலும் சிலர் கள்ளச்சாராயம் வாங்கிக் குடிக்கின்றனர். சிலர் மற்ற மாநில மதுபானங்களை கள்ளச் சந்தையில் வாங்கி குடிக்கின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் மதுபானம் ஏதும் கிடைக்காததால் சானிடைசர் வாங்கி குடித்த 3 பேரில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேல அக்ரஹாரம் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் இளங்கோவன், நண்பர்கள் மோகன், சரவணன் ஆகிய 3 பேரும் கடந்த 7ம் தேதி போதைக்காக சானிடைசரை குடித்துள்ளனர். இதனால் 3 பேருக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து முதலில் அரியலூரிலும் பின்னர் தஞ்சை மருத்துவக் கல்லூரியிலும் அனுமதிக்கப்பட்ட இளங்கோவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது நண்பர்கள் மோகன் மற்றும் சரவணன் புதுச்சேரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அரைமணிநேர போதைக்காக சானிடைசர் குடித்து இளங்கோவன் உயிரிழந்ததால் அவரது குடும்பம் தற்போது வறுமையில் சிக்கித் தவிக்கிறது.


Share

Related posts

ஏடிஎம்ல துட்டு இல்லன்னா, எங்களுக்கு டப்பு கொடுக்கணும் – ரிசர்வ் வங்கி கொட்டு

Udhaya Baskar

சொத்துக் குவிப்பு புகாரில் சிக்கிய பீலா ராஜேஷ் !

Udhaya Baskar

ஜனவரி 19ல் முடிவுக்கு வருகிறது வடகிழக்கு பருவமழை

Admin

ஒற்றை தலைமையும் ஒருங்கிணைப்பும் இருந்தால்தான் அ.தி.மு.க.வுக்கு வெற்றி !

Udhaya Baskar

தாலிபன்களை மிரட்டும் துப்பாக்கி ஏந்திய பெண் கவர்னர்

Udhaya Baskar

காவிரி வடிநிலப் பகுதிகளில் புனரமைப்புப் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுகீடு

Admin

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி

Udhaya Baskar

ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் தற்கொலை – கனிமொழி கவலை !

Udhaya Baskar

பெட்ரோல் விலை: தி.மு.க இரட்டை வேடம் அம்பலம் – அன்புமணி

Udhaya Baskar

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

தங்கம் விலை 23-07-21 காலை நிலவரம்

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை- 33 அரசு அதிகாரிகள் கைது

Admin

Leave a Comment