தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: பிரபல நடிகருக்கு சம்மன்

Share

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு ஜனவரி 19ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு, விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போராட்டத்தின்போது, 20218ம் ஆண்டு மே 22ந்தேதி அன்று, போராட்டக்காரர்கள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இதில், சம்பவ இடத்திலேயே 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து 2018ம் ஆண்டு மே மாதம் 30ந்தேதி நடிகர் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். அப்போது பாதிக்கப்பட்ட 48 பேருக்கு தலா பத்தாயிரம் ரூபாய் நிதி அளித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, சமூக விரோதிகளே தூத்துக்குடி வன்முறைக்கு காரணம் என்று தெரிவித்தார்.இந்த நிலையில், தற்போது, ரஜினி விசாரணைக்கு ஆஜராக மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ஜனவரி 19ம் தேதி விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


Share

Related posts

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு

Udhaya Baskar

மாணவர்களுக்கு திமுக வி.எஸ்.கலை செல்வன் வேண்டுகோள்…

Udhaya Baskar

ராஜேந்திர பட்டினம் ஊராட்சியில் புதிய ஆழ்துளை கிணறு!

Udhaya Baskar

2019ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் – தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவர் ?

Udhaya Baskar

ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி மின்சார ரயில் இயங்கும்

Admin

வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது…

Udhaya Baskar

தனிநபர் வருமானத்தில் வங்கதேசம் இந்தியாவை முந்தியுள்ளது!

Udhaya Baskar

காவல்துறை, சீருடைப் பணியாளர்கள் 131 பேருக்கு அண்ணா பதக்கம் – தமிழக அரசு

Udhaya Baskar

முட்டை விலை தொடர்ந்து உயர்வு – கோழிகள் ஏக்கம்

Udhaya Baskar

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் கூடுதலாக கடன் பெற அனுமதி

Admin

பேரறிவாளன் பரோல் மனு நிராகரிப்பு!

Udhaya Baskar

ஜேஇஇ முதன்மைத் தேர்வு நான்கு கட்டங்களாக நடத்தப்படும்

Admin

Leave a Comment