கொரோனாவை குணப்படுத்தும் லேகியம்! ஆந்திராவில் இலவசம்!

Share

கொரோனாவை குணப்படுத்த ஆனந்தய்யா லேகியம் பயன்படுத்தலாம் என ஆயுஸ் அமைச்சகம் அனுமதி அளித்ததை அடுத்து அதற்கான பணி ஆந்திராவில் தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திர மாநிலம் சந்திரகிரி தொகுதியில் சுமார் 1.60 லட்சம் குடும்பங்களுக்கு ஆனந்தய்யா லேகியம் செய்யும் பணியை அந்த் தொகுதியின் எம்எல்ஏ எம்எல்ஏ பாஸ்கர் ரெட்டி தொடங்கி வைத்தார்.

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஆனந்தய்யா மருந்து பொது மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த மருந்தை பயன்படுத்தலாமா என முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி மத்திய ஆயுஸ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். பழங்கால நாட்டு மருந்தை போன்று இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆயுஸ் அமைச்சகத்தின் அறிக்கை தந்ததை அடுத்து ஆனந்தய்யா லேகியம் தயாரிக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையொட்டி அரசு கொறடாவும் சந்திரகிரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர் ரெட்டி தலைமையில் அனந்தய்யா மகன் ஸ்ரீதர் மற்றும் அவரது உதவியாளர்கள் மூலம் ஆனந்தய்யா லேகியத்தை தயார் செய்து சந்திரகிரி தொகுதியில் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரம் குடும்பத்தினருக்கு இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளார்.

ஆனந்தய்யா மருந்தை அவரது மகன் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் இயற்கை மூலிகைகளை கொள்முதல் செய்து லேகியம் தயாரிக்கும் பணியை பாஸ்கர் ரெட்டி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஸ்கர் ரெட்டி இந்த லேகியத்தின் மூலம் கொரோனா வைரசை எதிர்த்து போராடும் வகையில் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், கருப்பு பூஞ்சை போன்றவற்றைக் வராமல் தடுக்கும் (பி) மருந்து மட்டுமே தயாரிக்கப்படுகிறது.

இங்கு தயார் செய்யப்படும் மருந்து சந்திரகிரி தொகுதியில் உள்ள 1.60 லட்சம் குடும்பங்களுக்கும், ( 5.20 லட்சம் ) பேருக்கும் இலவசமாக வழங்கப்படும். இதற்காக 16 இயற்கை மூலிகைகள் மூலம் ஆனந்தய்யா மருந்து தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதில் கிராமங்களில் கிடைக்கும் வேப்பம், நாகபழம் இலை , மா இலை , நெல்லிக்காய், புதினா, வெள்ளை எருக்கம் பூ , உள்ளிட்ட மூலிகை பொருட்களை பொதுமக்கள் தாங்களாக முன்வந்து வழங்கியுள்ளனர்.

மக்களின் பங்களிப்பு மறக்க முடியாதது. இரண்டு நாட்களில், தொகுதியில் உள்ள 142 கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 1600 கிராமங்களில் ஆனந்தய்யா மருந்தை விநியோகிக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.


Share

Related posts

முந்திரிக்காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர்கள் கைது! ‘குடி’ மகன்கள் அதிர்ச்சி !

Udhaya Baskar

கருப்புப் பூஞ்சை மருந்து தட்டுப்பாடுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் – மருத்துவர் இராமதாசு அறிக்கை

Udhaya Baskar

ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.962 கோடி பணப்பலன்

Admin

2000 ரூபாயை நம்பி ஐந்து வருடத்தை அடகு வைக்க வேண்டாம்

Admin

சுயநலத்திற்காகவே பொங்கல் பரிசு – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

Admin

கொடைக்கானல் – மூன்று பூங்கா தோட்டங்களை மூட உத்தரவு.

Udhaya Baskar

முதல்வர் விவசாயிகள் நலனுக்காக கடனை ரத்து செய்யவில்லை ! தேர்தல் சுயநலத்திற்காகவே ! – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு !

Udhaya Baskar

திமுக மாநில மருத்துவ அணி கூட்ட தீர்மானங்கள்

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

மனைவி மிரட்டலால் பயந்து போய் விடுப்பு கடிதம் எழுதிய காவலர்

Admin

உத்திரபிரதேச அரசின் அதிரடி உத்தரவால் மருத்துவர்கள் அதிர்ச்சி

Admin

ஜல்லிக்கட்டில் 750-க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்பு

Admin

Leave a Comment