ஓட்டுக்கேட்டவர்களுக்கு உதவ மனமில்லை ! கண்ணீர் விட்ட பெண்ணுக்கு மிரட்டல் !

Share

தேர்தலின்போது ஓட்டு கேட்ட வந்தவர்கள் தற்போது உதவவில்லை என்றும் தற்போது உதவி வேண்டும் என்றும் வாட்ஸ்அப்பில் பேசிய பெண்ணுக்கு கொலை மிரட்டல் வருவதாக புகார் எழுந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நரிப்பாளைம் கிராமத்தை சேர்ந்த சுபலா என்பவர் 50 குடும்பங்கள் கொண்ட தங்கள் கிராம மக்கள் வறுமையில் வாடுவதாகவும், தங்கள் கிராமத்திற்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை என வீடியோ வெளியிட்டார்.

மேலும் தங்களுக்கு ரேசன் கார்டுகள் இல்லையென்றும் விண்ணப்பித்து 6 மாதமாகியும் கிடைக்கவில்லை, மளிகை பொருட்கள் வாங்க கூட ஊரை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்றும் பேசியிருந்தார். மேலும் ஓட்டுக்கேட்டு வந்தவர்கள் கூட உதவிக்கு வரவில்லை வீடியோ ஒன்றை பதிவு செய்து அதனை வாட்ஸ் அப்பில் பதிவிட அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில் இதை கேட்டுவிட்டு, அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் வீடு தேடி வந்து உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கையில் சுபலா இருந்தார். ஆனால் சுபலாவை ஆளுக்கு ஒரு பாணியில் கடுமையாக மிரட்டிச்சென்றதாக கூறப்படுகின்றது. இதனால் சுபலா தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி 2 வதாக வீடியோ ஒன்றை கண்ணீர் மல்க வெளியிட்டுள்ளார்

சுபலா தன்னை போல ஒரு சிலரின் பிரச்சனையை, ஊரில் உள்ள மொத்த பேரும் பிரச்சனையுடன் இருப்பது போன்று மிகைப்படுத்தி பேசியதால்தான் உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் சத்தம் போட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது. அதனால்தான் அவர் தற்கொலை செய்து கொள்வதாக வீடியோ வெளியிட்டதாக கூறப்படுகின்றது. சொந்த பிரச்சனையை ஊருக்கே பிரச்சனை போல மிகைப்படுத்தி பேசியதால் சுபலாவுக்கு இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது.


Share

Related posts

பாண்டியன் ஸ்டோர் நடிகை தற்கொலை: விரைவில் விசாரணை அறிக்கை

Admin

ஒரு ரூபா லாபம், 20,000 ரூபா நஷ்டம்; பயணிக்கு பஸ் நிர்வாகம் தண்டம் !

Udhaya Baskar

தடுப்பூசி போட்டாதான் ரயிலில் அனுமதி; மராட்டிய அரசு அதிரடி

Udhaya Baskar

உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடிக்கு வரவேற்பு: பாமகவுக்கு கிடைத்த வெற்றி! – இராமதாசு

Udhaya Baskar

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

Admin

திருமாவளவனுக்கு ஹிந்து அமைப்புகள் கடும் கண்டனம்

Admin

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் வாக்குறுதிகள்

Admin

கருப்பு பூஞ்சை தொற்று, இன்னொரு ஆபத்தா???

Udhaya Baskar

வட்டியை ரத்து செய்தால் வங்கிகளுக்கு பெரிய இழப்பு ஏற்படும் – மத்திய அரசு

Admin

3 மாணவர்கள் தற்கொலை மனசாட்சியை உலுக்குகிறது – சூர்யா உருக்கம்

Udhaya Baskar

விரும்பினால் அரியர் தேர்வை நடத்திக் கொள்ளலாம்! நீதிமன்றம்

Udhaya Baskar

தங்கம் விலை ரூ.320 குறைந்தது

Udhaya Baskar

Leave a Comment