5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Share

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் இன்று முதல் 5 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக, ஆகஸ்ட் 31 முதல் ஆகஸ்ட் 4 வரை 5 நாள்களுக்கு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2 ஆடிக் கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அன்று லட்சக்கணக்கான மக்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், கொரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டது.

எனவே ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு இன்று முதல் 5 நாள்களுக்கு முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வர அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயம் கோயில் அனைத்து பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகங்களை கோயிலின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக வீட்டிலிருந்தே பக்தர்கள் பார்த்து மகிழலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share

Related posts

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புதிய துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

Udhaya Baskar

ஏடிஎம் மையத்தில் பயங்கர தீ விபத்து; லட்சக்கணக்கான பணம் கருகியது

Admin

17,000 கோடி ரூபாய் வருவாய் பற்றாக்குறை – வெள்ளை அறிக்கை

Udhaya Baskar

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை கைப்பற்றியது தலிபான்

Udhaya Baskar

கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்த அமைச்சர் கே.என். நேரு உத்தரவு

Udhaya Baskar

மே 15 – தமிழக இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சி முகாம் !

Udhaya Baskar

நடிகர் சரத்குமாருக்கு கொரோனா தொற்று

Admin

முன்ஜாமீன் மனு தள்ளுபடி… கைதாவாரா முன்னாள் அமைச்சர் மணிகண்டன்???

Udhaya Baskar

அண்டார்டிகாவில் டெல்லியை விட 3 மடங்கு பெரிய பரப்பளவு கொண்டத பனிப்பாறை உடைந்தது

Udhaya Baskar

ரூ 2000 மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களுக்கு இன்று முதல் டோக்கன் வழங்கப்படுகின்றன

Udhaya Baskar

மின் கட்டணம் செலுத்த ஜூன் 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

Udhaya Baskar

டெல்லியில் 4.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்

Admin

Leave a Comment