41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் தங்கம்

Share

இந்தியா – ஜெர்மனி அணிகள் இடையிலான வெண்கலப் பதக்கத்துக்கான ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 5க்கு 4 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்று வெண்கலப் பதக்கம் வென்றது.

ஆட்டம் தொடங்கிய 2வது நிமிடத்தில் ஜெர்மனி அணி கோல் அடித்தது. முதல் கால் ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணிக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்து.

2வது கால் ஆட்டத்தில் இந்திய வீரர் சிம்ரன்ஜித் கவுர் முதல் கோல் பதிவு செய்தார். பின்னர் ஜெர்மனி 2 கோல்களை தொடர்ந்து அடித்தது. அதன் பின்னர் இந்திய வீரர் ஹர்மன் ப்ரீத் இந்தியாவிற்கான 3-ஆவது கோலை பதிவு செய்தார்.

முதல்பாதியாட்டத்தில் இந்தியா 3 கோல், ஜெர்மனி 3 கோல் என சமநிலையில் இருந்தன. 2வது பாதியில் ருபிந்தர் சிங் பால் கோலை பதிவு செய்தார். ஜெர்மனி வீரரின் தவறால் இந்தியாவுக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிட்டியது. இதனை சிம்ரன்ஜீத் கவுர் எதிர்கொண்டு 5வது கோல் அடித்து விளாசினார்.

ஆனாலும் ஜெர்மனி இரண்டாவது பாதியில் 4வது கோலை பதிவு செய்தது. ஆனால் இந்தியா தொடர்ந்து விளையாடி ஆட்ட நேர முடிவு வரை ஜெர்மனியின் கோல் போடும் முயற்சியை தடுத்தது.

ஆட்டம் முடிவதற்கு 6 விநாடிகள் இருந்த நிலையில் ஜெர்மனிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இந்திய அணி வீரர்கள் அந்த வாய்ப்பை முறியடித்தனர். இறுதி நேர முடிவில்  5க்கு 4 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. ஒலிம்பிக்கில் 41 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியா பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளது. 


Share

Related posts

“பப்ஜி மதன்” பெற்றோரிடம் போலீசார் தீவிர விசாரணை

Udhaya Baskar

கொரோனா இருப்பதை வீட்டிலேயே கண்டறியும் புதிய கருவி

Udhaya Baskar

எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன்: கமல்

Admin

ரூ.499 ரீசார்ஜ் செய்தால் டிஸ்னி ஹாட்ஸ்டார் இலவசம் – ஜியோ

Udhaya Baskar

சென்னை மற்றும் சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது

Admin

பாதிக்கப்பட்ட செய்திதாள்களுக்கு சலுகை தர வலியுறுத்தல்

Admin

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டம்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

Admin

சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் -சென்னை மாநகராட்சி

Admin

டிசம்பர் 26 முதல் பொங்கல் பரிசு டோக்கன்கள் விநியோகம்

Admin

பாதுகாக்கப்பட்ட புராதன சின்னங்களாக 2 இடங்கள் தேர்வு

Admin

தங்கம் விலை ரூ.200 குறைந்தது

Udhaya Baskar

Leave a Comment