உயிர்காக்க 40 ஆக்ஸிஜன் படுக்கைகள் ! அமைச்சர் காந்தி அர்ப்பணிப்பு !

Minister Gandhi
Share

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடத்தை அமைச்சர் காந்தி திறந்து வைத்தார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 491 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

4,726 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 38,634 குணமடைந்தோர் எண்ணிக்கை 33,517 பேராகவும் உள்ளது. 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 5 பேர் கரும் பூஞ்சை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றால் இதுவரை 391 பேர் உயிரிழந்துள்ளதாக மாவட்ட சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.

அதன்படி வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 40 படுக்கைகள் கொண்ட புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.

இந்த கட்டிடத்தை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்.

இதுமட்டுமின்றி அமைச்சர் காந்தி 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு ஆக்சிஜன் செரிவூட்டி இயந்திரத்தினை மருத்துவமனைக்கு வழங்கினார். இதற்கு மருத்துவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந் நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், அரசு மருத்துவர்கள் உஷா நந்தினி, கீர்த்தி மற்றும் கலந்து கொண்டனர்.


Share

Related posts

மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் 6.85 லட்சம் பறிமுதல்

Admin

71 B.Ed., கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்குத் தடை

Udhaya Baskar

பொங்கல் பரிசு தொகுப்பில் சர்க்கரைக்கு பதில் வெல்லம்

Admin

மக்களின் அருமை முதல்வருக்கு தெரியவில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

ஆன்லைனில் சரக்கு! “குடி”க்கும் மகன்கள் மகிழ்ச்சி

Udhaya Baskar

11 மாவட்டங்களில் ஒருசில தளர்வுகள் மட்டுமே அனுமதி…

Udhaya Baskar

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை – கே.பி.முனுசாமி உறுதி

Admin

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

தேர்வுகள் நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார்: அமைச்சர்

Admin

பெண்களுக்கான விதிக்கப்பட்டு இருந்த நேரக்கட்டுப்பாடு ரத்து: தெற்கு ரயில்வே

Admin

இ-பாஸ் முறை இனித் தேவையில்லை – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

Leave a Comment