ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Share

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என பெயர் மாற்றி பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

விளையாட்டுத் துறையில் சாதனை படைப்பவர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ் காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா பெயரில் விருதுகளை வழங்கி மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

அந்த வகையில், விளையாட்டு துறையில் சிறந்த சாதனைகளை நிகழ்த்தும் வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுகிறது. சென்ற வருடம் இந்திய கிரிக்கெட் வீரா் ரோகித் சா்மா, மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. இந்த விருதுகள் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29ம் தேதி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மாற்றி பிரதமர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதாவது இந்த விருது இனி, மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா என்றழைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் விருது என மாற்ற பல்வேறு தரப்பினர் கோரிக்கைகள் விடுத்ததாகவும், அதானாலேயே கேல் ரத்னா விருது இனிமேல்  மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும் என்றும் ட்விட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான் சந்த், 1926ம் ஆண்டு முதல் 1949ம் ஆண்டு வரை வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். 185 ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்துள்ளார். இவர் பங்கேற்ற 3 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றுள்ளது. தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29ம் தேதி இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினமாக கொண்டாட்டப்படுகிறது. 


Share

Related posts

5 நாள் திருத்தணி முருகனை தரிசிக்க அனுமதி இல்லை

Rajeswari

கைத்தறிகள் கிராமப் பொருளாதாரத்தின் பெரும் தூண் – கமல்

Udhaya Baskar

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நூதான ஆர்ப்பாட்டம்: சமக மகளிர் அணியினர்

Admin

மும்மொழிக் கொள்கை – முன்னாள் துணைவேந்தர் மீது பொன்முடி குற்றச்சாட்டு

Udhaya Baskar

காரில் செல்லும் எனக்கு மாஸ்க் எதற்கு? சிறுமி கேள்வி – போலீஸ் அதிர்ச்சி

Udhaya Baskar

சிறப்பாக பணியாற்றிய எம்.பி.க்கள் குறித்து கருத்துக்கணிப்பு

Admin

எல்லோர்க்கும் எல்லாம் என்பதே இலட்சியம் – மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

எஸ்.பி.பி. விரைவில் குணமடைய வேண்டும் – ரஜினி

Udhaya Baskar

கொரோனா அச்சம் ! ரயில் நிலையங்களில் பிளாட்பார்ம் டிக்கெட் கிடையாது !

Udhaya Baskar

டிசம்பர் 23 முதல் மாற்றப்பட்ட நேரத்தில் பயணிக்கும் தூத்துக்குடி-மைசூரு எக்ஸ்பிரஸ் ரெயில்

Admin

சென்னை மக்கள் போலீசில் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண்கள்

Udhaya Baskar

பெங்களுர் அபார வெற்றி, டி வில்லியர்ஸ் அதிரடி: ரசிகர்கள் ஏமாற்றம்

Udhaya Baskar

Leave a Comment