மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் தொடக்கம்

Share

மிழக அரசால் புதியதாக தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த தொளவேடு கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தொடங்கி வைத்தார்.

இந்தத் திட்டம் மூலம் பொதுமக்கள் மருத்துவமனையை தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இந்தத் திட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ சேவை செல்லும். அதாவது நோயால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே சென்று சில அத்தியாவசியமான மருத்துவச் சேவைகளை தமிழக அரசு வழங்க உள்ளது.

இந்த திட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.

இரத்த அழுத்தம், நீரிழிவு, சிறுநீரகப் பிரச்சனை, குழந்தைகளுடைய பிறவிக் குறைபாடுகள் போன்றவற்றை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினை கிருஷ்ணகிரியில் தொடங்கி வைத்துள்ளார்.

அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் பெரியாபளையத்தை அடுத்த தொளவேடு கிராமத்தில் பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜே கோவிந்தராசன், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் மற்றும் மாவட்ட ஆட்சியர், மாவட்ட பெரும் குழு தலைவர் கே வி.உமாமகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் எம்எல்ஏ சி.ஹெச் சேகர், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் ஜெயமூர்த்தி, பூண்டி வடக்கு ஒன்றிய செயலாளர் பெருஞ்சேரி பி. ரவி, திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.  


Share

Related posts

பான்கார்டுடன் ஆதாரை இணைக்க ஜூன் 30 வரை அவகாசம்

Udhaya Baskar

இந்தியாவை கவுரவப்படுத்த மதுரை ரேவதி தயார்!

Udhaya Baskar

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது? புதிய அறிவிப்பு வெளியீடு

Admin

மாஃபியா போல் மாறியதா பாலிவுட் சினிமா துறை – கங்கனா ரனாவத்

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

டாஸ்மாக்கை திறக்க காட்டும் ஆர்வம், மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டெடுப்பதில் இருக்க வேண்டும் – மக்கள் நீதி மய்யம்

Udhaya Baskar

என்டிடிவி நிறுவனர்களுக்கு ரூ. 27 கோடி ரூபாய் அபராதம்

Admin

டெல்லியில் லேசான நிலநடுக்கம்

Admin

41 ஆண்டுகளுக்குப் பிறகு ஹாக்கியில் பதக்கம்

Udhaya Baskar

கக்கன் 112வது பிறந்தநாள் – அமைச்சர் மூர்த்தி மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

வீடு கட்டும்போது கண்முன்னே வந்த கடவுள்! கிராம மக்கள் மகிழ்ச்சி!

Udhaya Baskar

43 ஆயிரம் ரூபாயை நெருங்கியது தங்கம் விலை

Udhaya Baskar

Leave a Comment