பல் மருத்துவ மாணவி படுகொலை; கொலையாளியும் தற்கொலை

Share

கேரளாவில் பல் மருத்துவ மாணவியை துப்பாக்கியால் சுட்டு கொன்ற இளைஞர், தன்னையும் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

கொச்சியை அடுத்த கோத்தமங்கலம் அருகே நெல்லிக்குழி என்ற கிராமத்தில், நேற்று பல் மருத்துவம் படித்து வந்த மாணவியை, இளைஞர் ஒருவர் சுட்டுக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

உயிரிழந்த மாணவி மானசா கோத்தமங்கலத்தில் உள்ள இந்திரா காந்தி கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வந்துள்ளார். கொலையாளி ராகில் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் கன்னூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

இருவருக்கும் இடையே இருந்த முன் விரோதமே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தகவல்கள் திரட்டப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாடகை வீட்டில் தனியாக இருந்த மாணவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகளுக்கு ராகில் அடிக்கடி தொல்லை கொடுத்ததாக ஏற்கனவே ஒருமுறை மானசாவின் பெற்றோர் போலிசில் புகார் அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. 


Share

Related posts

தங்கம் விலை ரூ.176 குறைந்தது

Udhaya Baskar

உரிமைக்குழு புதிய நோட்டீஸ்களை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ.,க்கள் ஐகோர்ட்டில் புதிய ரிட் மனு

Udhaya Baskar

லாக் டவுன்! பாண்டியன் ஸ்டோர்ஸ் மூடப்படுகிறதா?

Rajeswari

அரேதா பிராங்க்ளின் எனக்கு இன்ஸ்பிரேஷன் – ஜெனிபர் ஹட்சன்

Udhaya Baskar

அழிந்து வரும் அலையாத்திக் காடுகள் (Mangrove Forests) பரப்பை அதிகரிக்க நடவடிக்கை தேவை! – இராமதாசு

Udhaya Baskar

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெயர் மாற்றம்

Udhaya Baskar

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கே லஞ்சம் கொடுக்க முயன்ற அரசியல்வாதி கைது

Admin

மருத்துவ மனையிலிருந்து புறப்பட்டார் துரைமுருகன்

Admin

பூஜ்ஜியம் கல்வி ஆண்டாக அறிவிக்க வாய்ப்பு இல்லை – கல்வி அமைச்சர்

Admin

ரஜினிகாந்த் கட்சியின் பின்னணியில் பாஜக வா? பொன் ராதாகிருஷ்ணன் மறுப்பு

Admin

வரதட்சனை தராத பெரிய வீடு! சின்ன வீட்டில் தொழிலதிபர்! பளார்! பளார்! பளார்!

Udhaya Baskar

திமுக ஆட்சியில் பாலியல் குற்றம் தொடர்பாக விசாரிக்க தனி நீதிமன்றம்- ஸ்டாலின்

Admin

Leave a Comment