சென்னையில் மீண்டும் வருகிறது கட்டுப்பாடுகள்

Share

சென்னையில் மீண்டும் கொரோனா தொற்று தலை தூக்க தொடங்கி உள்ளதால், மக்களின் நலன் கருதி சில கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்களில் ஆகஸ்ட் 9 வரை அங்காடிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் தலைமையில் நடைபெற்றக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது ரங்கநாதன் தெரு, வடக்கு உஸ்மான் சாலை, மாம்பலம் ரயில் நிலையம், புரசைவாக்கம், டவுட்டன், புருக்லின் சாலை, ஜாம் பஜாா், பாரதி சாலை, பெல்ஸ் சாலை , ஃபக்கி சாஹிப் தெரு, அபிபுல்லா தெரு, புலிபோன் பஜாா் , என்எஸ்சி போஸ் சாலை, குறளகம், தங்கசாலை, ராயபுரம் சந்தை, கல்மண்டபம் சாலை, வாட்டா் டேங்க் முதல் காமாட்சி அம்மன் கோயில் வரை, அமைந்தகரை சந்தை, புல்லா நிழற்சாலை, திருவிக நகா் பூங்கா சந்திப்பு, ரெட்ஹில்ஸ் சந்தை, ஆஞ்சநேயா் சிலை முதல் அம்பேத்கா் சிலை வரை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் ஆகஸ்ட் 9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை.

கொத்தவால் சாவடி சந்தையும் ஆக.9-ஆம் தேதி காலை 6 மணி வரை செயல்பட அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, கூட்ட நெரிசல் அதிகம் இருக்கும் பகுதிகளைத் தவிர்க்கவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Share

Related posts

அமெரிக்காவில் தேர்தல் ! மன்னார்குடியில் பேனர் ! கமலா ஹாரீசுக்கு வாழ்த்து !

Udhaya Baskar

அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Udhaya Baskar

பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

Udhaya Baskar

பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்: ரஜினி எச்சரிக்கை

Admin

பேரறிஞர் அண்ணா சிலைக்கு மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Udhaya Baskar

புரெவி புயல் பாதிப்பு: மதிப்பீடு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை

Admin

மே மாத மின் கட்டணத்தை நுகர்வோரே கணக்கிட்டு செலுத்தலாம்

Udhaya Baskar

அரசு ஊழியர்களுக்கு தற்காலிக சிறப்பு மிகை ஊதியம் – தமிழக அரசு

Admin

தமிழகத்தில் ஜன.31ல் போலியோ சொட்டு மருந்து முகாம்

Udhaya Baskar

சென்னை இறைச்சி கடைகள் தீவிர கண்காணிப்பு

Admin

கமல்ஹாசனுக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ சவால்

Admin

தேனியில் கம்யூனிஸ்ட் சங்கங்களின் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்

Udhaya Baskar

Leave a Comment