ஒலிம்பிக்ஸ் – ஹாக்கியில் போராடித் தோற்ற மகளிர் அணி

Share

டோக்யோ ஒலிம்பிக்ஸில் மகளிர் ஹாக்கி வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை 4-3 என வீழ்த்தி வெண்கலம் வென்றுள்ளது இங்கிலாந்து அணி.

மகளிர் ஹாக்கி அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 1க்கு 2 என்ற கோல் கணக்கில் உலகின் 2-ஆம் நிலை அணியான அர்ஜென்டினாவிடம் வீழ்ந்தது.

ஒலிம்பிக் வரலாற்றில் முதன் முறையாக அரையிறுதி வரை முன்னேறிய இந்திய மகளிர் அணி, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் இங்கிலாந்தை சந்தித்தது.

முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி 2க்கு 0 என முன்னிலை பெற்றது. பின்னர் இந்திய மகளிர் அணி சுறுசுறுப்பாக விளையாடி அடுத்தடுத்து மூன்று கோல்களை அடித்து முன்னணி பெற்றது. ரியோ ஒலிம்பிக்கில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து, மீண்டும் 2 கோல்களை அடித்து 4க்கு 3 என ஆட்டத்தை வென்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது.

பதக்கம் எதுவும் பெறாமல் இந்திய மகளிர் அணி வெளியேறினாலும் அரையிறுதிக்கு தகுதி பெற்றதால் ரசிகர்களின் மனதை வென்றுள்ளார்கள். தரவரிசையில் 9வது இடத்தில் உள்ள இந்திய அணி மூன்றாவது ஒலிம்பிக் போட்டியிலேயே அரையிறுதிக்கு தகுதி பெற்று சாதனை படைத்தது. முதல் மூன்று ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்றபோதும் வலுவான அணிகளுடன் கடுமையாக போட்டியிட்டது. காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தது. டோக்யோ ஒலிம்பிக்கில் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்துள்ளது. இந்த புதிய  அத்தியாயம் இந்திய மகளிர் ஹாக்கிக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.


Share

Related posts

உலக மகளிர் நாள் – இராமதாசு வாழ்த்து

Udhaya Baskar

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து!முன்பதிவு செய்துக்கொள்ளலாம்

Udhaya Baskar

அனைத்து கல்லூரி விடுதிகளிலும் கொரோனா பரிசோதனை

Admin

ஜூன் 21ம் தேதிக்கு பிறகே பேருந்து சேவை – தமிழக அரசு

Udhaya Baskar

இதயமற்றவர்களே ரூ.2500 உதவித் தொகையை விமர்சிகின்றனர் – அமைச்சர் ஓ.எஸ். மணியன்

Admin

விதை விதைத்தவர்களுக்கு பாராட்டு ! இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்!

Udhaya Baskar

உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து – ஜனநாயகம் போற்றுகின்ற தீர்ப்பு

Udhaya Baskar

விலையேற்றத்தில் சாதனை செய்ய அரசு திட்டம்? கமல் கடும் விமர்சனம்

Admin

குழந்தை வேண்டாமா? குப்பையில் போடாதீர்கள் !

Udhaya Baskar

தாயின் சொத்தை அபகரித்த ஊர்க் காவலன் ! வீட்டை இழந்து வீதிக்கு வந்த தாய் !

Udhaya Baskar

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை

Admin

Leave a Comment