அண்ணா பல்கலை. துணைவேந்தர் ஆர்.வேல்ராஜ்

Share

சென்னையில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தராக ஆர். வேல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே துணைவேந்தராக இருந்த கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவின் பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அண்ணா பல்கலை. துணை வேந்தராக யாரை நியமிக்கலாம் என ஆளுநர் தலைமையிலான தேர்வுக்குழு ஆலோசனை நடத்தியது. இந்தக் குழு டாக்டர் ஆர்.வேல்ராஜை புதிய துணைவேந்தராக நியமிக்கலாம் என பரிந்துரை செய்தது.

இதையடுத்து அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக டாக்டர் ஆர்.வேல்ராஜை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் ஆர்.வேல்ராஜ் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆற்றல் ஆய்வுத் துறை பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இத்துறையின் இயக்குனராகவும் இருந்துள்ளார். கல்வித்துறையில் 33 ஆண்டுகள் அனுபவமிக்கவர் வேல்ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


Share

Related posts

மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணைந்தனர் !

Udhaya Baskar

சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி – சீமான்

Admin

புதிதாக உருவாக்கப்படும் மனை பிரிவுகளுக்கு புதிய கட்டுப்பாடு

Admin

எஸ்றா சற்குணம் ஒரு மத வெறியர் – எச்.ராஜா விமர்சனம்

Admin

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸாஸ் விண்வெளிக்கு பயணம்

Udhaya Baskar

இளவரசி, சுதாகரன் சொத்துகள் அரசுடமையாகின – தஞ்சை ஆட்சியர்

Udhaya Baskar

Whatsup-ல் இனி Dark Mode பயன்படுத்தலாம் ! மகிழ்ச்சி !

Udhaya Baskar

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைப்பு: பாஜக

Admin

ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல் லஞ்சம் கேட்கிறார்கள் ! – கோர்ட்

Udhaya Baskar

கோவை ஆர்டிஓ சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு

Admin

“கலைஞரின் கடைசி யுத்தம்” புத்தகம் வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்

Udhaya Baskar

சென்னையில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்!

Udhaya Baskar

Leave a Comment